செய்திகள் :

Iran : `இன்று இரவு முழு நாகரிகமும் அழிந்துவிடும்' - ஈரான் போரில் ட்ரம்ப் எச்சரிக்கை!

post image

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீதும், அண்டை நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வந்தது. ஒருகட்டத்தில் ஈரானின் கை ஓங்கும் நிலை உருவானது. ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனால், உலகின் பல்வேறு நாடுகளுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. பங்குச் சந்தை சரிவு தொடங்கி விலைவாசி உயர்வு வரை அத்தனை பொருளாதார நெருக்கடிகளையும் உலக நாடுகள் சந்தித்தன.

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹர்முஸ் ஜலசந்திக்கு தன் பெயரை வைக்க வேண்டும் எனவும், ஈரானும் அமெரிக்காவும் சேர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்தும் என்றெல்லாம் பேசி வந்தார். இது எதற்கும் ஒப்புக்கொள்ளாத ஈரான், தன் முடிவில் உறுதியாக இருந்தது. அதே நேரம், அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கும் பதிலடி கொடுத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கு எதிராக 'No King' போராட்டம் வெடித்தது.

இதனால், பல்வேறு நாடுகள் ஸ்தம்பித்தன. அதே நேரம், இந்தப் போரின் மீது அமெரிக்காவின் முக்கியப் புள்ளிகளுக்கும் பெரும் விருப்பம் இல்லை என சமீபத்திய அறிக்கைகள் வெளியாகின. இதனால் வெறுப்புக்குள்ளான ட்ரம்ப், 'இன்னும் சில தினங்களில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். எனக்கு உதவி செய்யாத உலக நாடுகள் தங்கள் எண்ணெயை ஹர்முஸ் ஜலசந்திக்குச் சென்று அவர்களே மீட்டு பத்திரமாக கொண்டு வரட்டும். இனி நான் உதவப்போவதில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

அப்படியிருந்தும் இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக, மிகக் கடுமையான அச்சுறுத்தலை அதிபர் ட்ரம்ப் வழங்கியிருக்கிறார். தன் ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``ஈரானின் நீண்டகால வரலாற்றில் இன்று இரவு ஒரு மிக முக்கியமான மற்றும் தீர்மானிக்கத்தக்கத் தருணமாகக் கருதப்படும். ஒருவேளை நிலைமை மோசமானால், இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீண்டு வராது.

இது நடக்கக் கூடாது என்பதே என் விருப்பம். ஆனாலும், அது நடக்கும். ஈரானில் இப்போது ஏற்பட்டுள்ள முழுமையான ஆட்சி மாற்றம் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. பழைய சிந்தனைகளைக் கைவிட்டு, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரவாதப் போக்கு இல்லாத புதிய தலைவர்கள் மேலோங்கி இருப்பதால், உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு புரட்சிகரமான, அற்புதமான மாற்றம் இன்று இரவு நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

கடந்த 47 ஆண்டுகளாக ஈரானில் நீடித்து வந்த மிரட்டிப் பறித்தல், ஊழல் மற்றும் உயிரிழப்புகள் நிறைந்த இருண்ட காலம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் மூலம் ஈரானின் மாபெரும் மக்கள் அமைதியையும், வளர்ச்சியையும் பெறுவார்கள். அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி; திருநாவுக்கரசர் மகனுக்கு நெருக்கடி? - அதிரும் அறந்தாங்கி!

அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, தி.மு.க-வினர் சிலர் ராமச்சந்திரனுக்கு எதிராகவும் மாற்ற... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி Vs உதயநிதி : 'கண்ணியமற்ற அழுக்கு பிரசாரம்!' - அரசியலுக்கு ஆரோக்கியமானதா?

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான காலம் முடிய சரியாக இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. தலைவர்கள் ஊர் ஊராக சுற்றி சுழன்று மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர். இப்போதுதான் பிரசாரம் கொஞ்சம் காரசாரமாக சூடு... மேலும் பார்க்க

`தேசம் உங்களை மன்னிக்காது' - பாஜகவுடன் ரகசிய உடன்பாடு என்ற மம்தா கருத்துக்கு ஜோதிமணி கண்டனம்

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று ... மேலும் பார்க்க

`சின்னமெல்லாம் தீர்ந்துபோச்சு' தமிழகத்தை அதிரவைத்த சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா?| Vote Vibes

இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திகைக்க வைத்து, வரலாற்றில் தடம் பதித்த ஒரு தமிழக சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா? 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வ... மேலும் பார்க்க

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்...' - வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி. மிகவும் பின்தங்கிய தொகுதியான இந்த தொகுதியில் வரும் கடவூர் பகுதி வளர்ச்சி எதுவும் இன்றி கைவிடப்பட்ட பகுதியாக உள... மேலும் பார்க்க

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' - லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவில் இணைத்த... மேலும் பார்க்க