செய்திகள் :

Pudhiya Geethai: "விஜய் சார், கிறிஸ்துவர்னு 'கீதை' டைட்டில் வைக்க விடல!" - இயக்குநர் கே.பி.ஜெகன்

post image

இயக்குநர் கே.பி.ஜெகன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதிய கீதை'.

சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ரீவைண்ட் தொடருக்கு அவரைப் பேட்டி கண்டோம்.

திரைப்படம் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டார்.

Pudhiya Geethai Movie
Pudhiya Geethai Movie

இந்தப் பேட்டியில் இயக்குநர் கே.பி.ஜெகன், "முதலில் படத்திற்கு 'கீதை' என்கிற தலைப்பைதான் வைத்திருந்தோம்.

ஆனால், நான் படத்திற்கு ரொம்பவே ஆசைப்பட்டு வைத்த டைட்டில் 'சாரதி'. கதாபாத்திரத்தின் பெயரையே அதற்கு வைத்துவிடலாம் என எண்ணினேன். அந்த பெயரின் சவுண்டும் எனக்குப் பிடித்திருந்தது.

ஆனால், அந்த டைட்டில் ஆக்ஷன் படத்திற்கு வைப்பது போல இருக்கிறது எனக் கூறிவிட்டார்கள். பிறகு படத்தின் தயாரிப்பாளரே, படத்திற்கு 'கீதை' என தலைப்பு வைக்கலாம் எனப் பரிந்துரைத்தார்.

அவர் ஆன்மிகம் மீது மிகுந்த பற்றுக் கொண்டவரும்கூட. அப்படி படத்திற்கு டைட்டில் 'கீதை' என தலைப்பு வைத்தோம். படத்தின் ரிலீஸ் நெருங்கும் வரை, இந்தத் தலைப்புதான் இருந்தது.

ஆனால், ரிலீஸுக்கு 15 நாள்களுக்கு முன்பு சில இந்து அமைப்புகள் சினிமா படத்திற்கு ஒரு புனித நூலின் பெயரை வைப்பதாக என கண்டனம் தெரிவித்தார்கள்.

Director KP Jagan
Director KP Jagan

படத்திலும் நாங்கள் பல விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். ஆனால், அதையெல்லாம் அவர்களுக்கு போட்டுக் காண்பித்து விளக்குவதற்கும் எங்களுக்கு நேரமில்லை.

உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மீண்டும் தயாரிப்பாளரேதான் 'புதிய கீதை' என்கிற தலைப்பைச் சொன்னார்.

`இளைய தளபதி விஜய் நடிக்கும், கீதை' என்றிருந்தது. விஜய் சார், கிறிஸ்துவர் என்பதால் அந்த நேரத்தில், அவர்கள் அந்தப் பெயரை வைக்க விடவில்லை." எனக் கூறினார்.

நிறுத்தப்பட்ட 'அரசன்' படப்பிடிப்பு: ``சிம்புக்காக வரவில்லை ஆனால்..." - கொந்தளிக்கும் டி.ராஜேந்தர்

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக அரசன் படம் உருவாகிறது. அனிருத் இசையில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தி... மேலும் பார்க்க

Neelira: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" - கார்த்திக் சுப்புராஜ்

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் 'நீளிரா' திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர... மேலும் பார்க்க

LIK: "சீமான் சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்!" - கீர்த்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத... மேலும் பார்க்க

Ranjan: "பிரசாந்தை பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் கலகல!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப... மேலும் பார்க்க

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப... மேலும் பார்க்க