செய்திகள் :

Ranjan: "பிரசாந்தை பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் கலகல!

post image

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது.

தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு 'ரஞ்சன்' என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், 'அந்தகன்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார்.

Court, State Vs Nobody Tamil Movie
Court, State Vs Nobody Tamil Movie

பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் விஷால் பேசுகையில், "ஒரு நாள்ல ஒரே இடத்துல ரெண்டு பாசிடிவ்வான விஷயம் நடக்கிறதுல ரொம்பவே சந்தோஷம்.

நான் உதவி இயக்குநராக இருந்தப்போ, பிரசாந்தோட படங்களை வியந்து பார்த்திருக்கேன்.

நாங்க விசிலடிச்சு கொண்டாடின நடிகர் இவர். அப்போ எங்க பக்கத்துல இருக்கிற பெண்களெல்லாம் பிரசாந்தை சைட் அடிப்பாங்க.

அதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். தொடர்ந்து சில்வர் ஜூப்ளி கொடுத்துட்டு இருப்பார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

தியாகராஜன் சாருடைய விஷன்தான், இன்னைக்கும் பிரசாந்தை இவ்வளவு பெரிய உயரத்துல நிக்க வச்சிருக்கு.

என்னுடைய அப்பா என்கிட்ட 'தியாகராஜன் சார் எப்படி அவருடைய பையனை கொண்டு வருகிறாரோ, அப்படி நான் உன்னை சினிமாவுக்குள்ள கூட்டி வருவேன்'னு தியாகராஜன் சாரை எடுத்துக்காட்டாக சொல்லுவார்.

வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தேவயாணி மேம் அத்தனை பரிச்சயம். அவருடைய லெகசியை தொடர்வதற்கு ப்ரியங்காவிற்கு பொறுப்புகள் இருக்கு." என்றார்.

LIK: "சீமான் சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்!" - கீர்த்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத... மேலும் பார்க்க

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப... மேலும் பார்க்க

Mrunal Thakur: "சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், 'வேண்டாம்'னு சொல்லிடுவேன்" - மிருணாள்

'சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருக... மேலும் பார்க்க

"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " - தம்பி ராமையா

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான 'TN 2026'. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில்... மேலும் பார்க்க

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

TN 2026: "அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்" - நட்டி நடராஜ் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த 'டி.என். 2026 தங்க நட்சத்திரம்' என்ற படம் அரசியல் நையாண்டி படமாகக் கவனம் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அதன் டீஸரில் விஜய்யின் கெட... மேலும் பார்க்க