செய்திகள் :

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

post image

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, வேட்பு மனுதாக்கல் என தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதற்கிடையில், அஸ்ஸாமின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அஸ்ஸாம் முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, கௌரவ் கோகோய் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா

அதில், சில ஆவணங்களை வெளியிட்டு, ``அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா, இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கும் ஹிமந்தாவின் மனைவி, எப்படி இரண்டு முஸ்லிம் நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்? அவருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதா? இந்தியச் சட்டப்படி ஒருவர் இரண்டு நாடுகளின் குடியுரிமை அல்லது பாஸ்போர்ட்டை வைத்திருக்க முடியாது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா? மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் துபாய் மற்றும் அமெரிக்காவில் உள்ள தனது சொத்துக்களை மறைத்துவிட்டார்." எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் அஸ்ஸாமில் தீயாக பரவி பல்வேறு விவாதங்களும் தொடங்கியது. இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா

இது தொடர்பாக பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``காங்கிரஸ் கட்சியினர் காட்டிய ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் எகிப்து நாட்டு கடவுச்சீட்டுகள் (Passports) முற்றிலும் போலியானவை. அவை 'AI ஃபோட்டோஷாப்' தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்டவை. குறிப்பாக, 'திப்பு சுல்தான்' என்பவரால் பதிவேற்றப்பட்ட அசல் ஆவணங்களை எடுத்து, அதில் எனது மனைவியின் புகைப்படத்தை இணைத்து மோசடி செய்திருக்கின்றனர். துபாய் கடவுச்சீட்டு விவகாரத்தில், அது போலியானது என்பதை அந்த நாட்டு அரசாங்க இணையதளம் மற்றும் இந்திய அரசும் உறுதி செய்துள்ளது.

அதில் உள்ள புகைப்படங்கள் கூட எனது மனைவியுடையது அல்ல. எகிப்திய பாஸ்போர்ட் போலியானது என்பதை Google Reverse Search மூலம் எளிதாகக் கண்டறியலாம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக பவன் கேரா மீது ஐபிசி 420, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்தைத் தவறாக வழிநடத்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது கடுமையான குற்றம். தேர்தல் முடிவுகளைப் பாதிக்க இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தானிய ஊடகங்கள் திட்டமிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. கடந்த 10 நாட்களில் அஸ்ஸாம் தேர்தல் குறித்து அவர்கள் நடத்திய அனைத்து விவாதங்களும் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் இருக்கிறது. நீதித்துறை மூலம் இதற்குத் தீர்வு காண்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு' - மு.க.ஸ்டாலின்

விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற... மேலும் பார்க்க