செய்திகள் :

`தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர் தங்கம் தென்னரசு' - மு.க.ஸ்டாலின்

post image

விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி திருச்சுழி தொகுதி வேட்பாளர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் தொகுதி வேட்பாளர் கடற்கரைராஜ், ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியன், சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ``திருச்சுழி தொகுதி வேட்பாளரும், எனது சகோதரரும், தலைவர் கலைஞரின் அன்புத் தூணுமான தங்கம் தென்னரசு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர். அவரை எதிர்கொள்ளக்கூட எதிர்க்கட்சியினர் தயங்குகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அந்த அளவுக்கு வலிமையான வேட்பாளர் தங்கம் தென்னரசு. எனவே, உதயசூரியன் சின்னத்தில் அவருக்கு நீங்கள் அனைவரும் மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

நம்மில் பலருக்கு சிவகாசி என்றால் பட்டாசு, சாத்தூர் என்றால் பலகாரம், விருதுநகர் என்றால் பரோட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, தீப்பெட்டி, காலண்டர் என அத்தனையும் தனித்துவமானது. உங்கள் உழைப்பினால்தான் இந்த மாவட்டத்தை ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கிறார்கள். மொத்தத்தில் சுறுசுறுப்புக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்ற மக்கள் வாழும் மாவட்டம் தான் விருதுநகர்.

அப்படிப்பட்ட விருதுநகர் மக்களை நாடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓய்வு இல்லாமல் உழைக்கும் உங்களைப் பார்த்து, நானும் என்னை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறேன்.

விருதுநகர் என்றால் வீர தியாகி சங்கரலிங்கனார் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது. அதுபோல ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பது போல, விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர்.

அரசியல் கடந்து தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஐயா காமராஜரை நான் எப்போதும் மறக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் என்று தலைவர் கலைஞர் அறிவித்ததை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத் தமிழர் காமராஜரின் மண்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது, மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதை அறிய முடிகிறது. நீங்களும் அதே எண்ணத்தில் இருந்தால், இங்கே நிற்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: தமிழ்நாட்டில் முகாமிட்ட பாஜக-வின் முக்கியப் புள்ளிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் இன்று மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களைத் தாக்... மேலும் பார்க்க

கோவை தெற்கு: ``எத்தனைப் பேர் வந்தாலும்..." - வேட்புமனு தாக்கலுக்குப் பின் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழ்நாட்டின் முதலமை... மேலும் பார்க்க

எம்.பி-யாக இருந்துகொண்டே எம்.எல்.ஏ-வுக்கு போட்டியிட முடியுமா? - சட்டம் என்ன சொல்கிறது? | Vote Vibes

ஒரு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும், அதேபோல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம்.அப்படி ஒரு நப... மேலும் பார்க்க

`30% கமிஷன்... கடவுள் சொத்திலும் கொள்ளை!’ - புதுச்சேரி என்.டி.ஏ அரசை விளாசிய ராகுல் காந்தி

தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, ``புதுச்சேரிக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். அதனால் புதுச்சேரி வந்து உங்களைப் பார்க்க நான் ஆசைப்படுவேன். புதுச்சேரியை நான் நேசிப... மேலும் பார்க்க

'திருநெல்வேலி செல்லும் விஜய்; வருத்தத்தில் கட்சி நிர்வாகிகள்!' - காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் திருநெல்வேலியில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கட்சித் தலைவரின் வருகையால் குஷியாக வேண்டிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். ... மேலும் பார்க்க

'நெருக்கும் காவல்துறை? கடைசி நிமிடத்தில் கிடைத்த மெசேஜ்!'- விஜய்யின் சென்னை பிரசாரம் ரத்தான பின்னணி!

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென கடைசி நிமிடத்தில் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறை தரப்பிலிருந்து கடைசி நிமிடத்த... மேலும் பார்க்க