செய்திகள் :

Neelira: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" - கார்த்திக் சுப்புராஜ்

post image

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் 'நீளிரா' திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

நீளிரா படத்தில்...
நீளிரா படத்தில்...

அந்தப் பதிவில், "'நீளிரா' திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சோமிதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம்.

அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம். கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை.

ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இது ஒரு தொடக்கம். A great start for a film movement! ஆனால் இந்த தொடக்கம் வளர்ந்து, இனி வரும் காலங்களில் இதைப் போன்ற கதைகளும் படைப்பாளிகளும் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால், வியாபார ரீதியாக திரையரங்குகளுக்கு ஒரு சிறிய நம்பிக்கையை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தொடக்கத்தில் குறைந்த திரைகளில்தான் வெளியிட்டோம். குறைந்த திரைகளே கிடைத்தது. புனித வெள்ளியில் தொடங்கி, வாய்மொழி பாராட்டு (Word of Mouth) பரவி, மேலும் பலரும் திரையரங்குகளுக்கு வந்து, ஞாயிற்றுக்கிழமை Easter நாளில் மக்கள் ஆதரவால் எங்கள் படம் உயிர்த்தெழும் என்று உறுதியாக நம்பினோம்.

ஆனால் ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை. ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை... பல வருடங்களாக சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

தயவுசெய்து எங்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். அது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயமாக மதிப்புடையதாக இருக்கும். குறிப்பு: இந்த படத்திற்கான OTT ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

எனவே சில வாரங்களில் OTT-யில் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். சினிமாவின் உயிர்த்தெழுதல் திரையரங்குகளில்தான் நிகழும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

LIK: "சீமான் சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்!" - கீர்த்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டிராகன்', 'டியூட்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத... மேலும் பார்க்க

Ranjan: "பிரசாந்தை பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் கலகல!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப... மேலும் பார்க்க

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" - நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப... மேலும் பார்க்க

Mrunal Thakur: "சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், 'வேண்டாம்'னு சொல்லிடுவேன்" - மிருணாள்

'சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருக... மேலும் பார்க்க

"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " - தம்பி ராமையா

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான 'TN 2026'. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில்... மேலும் பார்க்க

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க