செய்திகள் :

"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " - தம்பி ராமையா

post image

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான 'TN 2026'. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அப்படக் குழுவினரிடம் பேட்டி கண்டது சினிமா விகடன் குழு. அப்போது பேசிய இத்திரைப்படத்தின் கதையாசிரியரான தம்பி ராமையா, "18 வயசு ஆனால் ஓட்டு போட வேண்டுமா என்ற காலம் போய், ஓட்டு போடுவதற்காக 18 வயசு ஆகவேண்டும் என்று காத்திருக்கும் அளவுக்கு சமூக வளர்ச்சி அடைந்து விட்டது.

Natty - TN 2026
Natty - TN 2026

வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இடத்திலாவது அரசியல் பேச்சு கேட்காமல் வீடு திரும்ப முடியாது. அரசியல் முதிர்வு என்பது 14 - 15 வயதிலேயே கிடைத்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன்.

இது தொடர்பாக நிறைய தகவல்கள் சேகரிக்க தொடங்கினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் எப்படி ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் தற்காலத்து பிள்ளைகள் உடனடியாக கிடைக்கும் விஷயத்தை மட்டுமே விரும்புகின்றனர்.

அவர்களுக்கு வரலாற்றை புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்படி பல வருட வரலாற்றை ஒரு கதைக்குள் கொண்டுவந்து படத்தை தயாரிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஆர்வம் காட்டினார். என் மகனிடம் இந்த படம் முழுக்க நான் நடிக்க வேண்டி இருக்கிறது நீ டைரக்டராக இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறிய உடன் அவனுக்கும் இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தியதால் தயங்காமல் ஒற்றுக் கொண்டான்.

பின்னர் படத்தின் கதாபாத்திரங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது இந்த படத்திற்கு நட்டி நடித்தால் நல்லா இருக்கும் என்று என் மகன் தான் கூறினான். தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கும் இப்படத்தில் நட்டி நடித்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. என் வயதுக்கும் முதிர்வுக்கும் நான் நடித்தேன்... நான் சம்பாதித்தேன் என்று இல்லாமல் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

விகடன் நேர்காணலில்...
விகடன் நேர்காணலில்...

அதற்காக எழுதப்பட்ட படம் தான் TN2026. இந்த இரண்டு மாதங்களில் நடந்தவை படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது. நாங்கள் எழுதிய ஒரு சில காட்சிகள் தற்போது உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. படத்தின் வெளியீட்டுக்கு இடையூறாக இருக்கும் காட்சிகள் வைக்கப்படாமல் இருப்பதை என் மகன் உமாபதி உறுதி செய்து கொண்டே இருந்தான்.

GenZ கிட்ஸ்க்கு புரிவது போலும் படம் அமைய வேண்டும் என்பதில் டைரக்டர் உமாபதி குறிப்பாக இருந்தான். இளைய தளபதி விஜய் ஒரு இரவில் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் சார் 100 எம்எல்ஏ-க்களுக்கு சமம். இப்படம் பல காலத்தில் நடந்ததன் ஒரு தொகுப்பு. முழு படத்தை பார்க்காமல் இந்த படம் இப்படித்தான் இன்று முடிவுக்கு வர வேண்டாம் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

TN 2026: "அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்" - நட்டி நடராஜ் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த 'டி.என். 2026 தங்க நட்சத்திரம்' என்ற படம் அரசியல் நையாண்டி படமாகக் கவனம் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அதன் டீஸரில் விஜய்யின் கெட... மேலும் பார்க்க

"விஜய் சார் போன்ற தோற்றம் வருமிடங்கள்.!" - விஜய் பற்றி நடிகர் நட்டி

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" - ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜூனாவை இந்தப் படம் சங்கடப்படுத்தாது!" - தம்பி ராமையா! | TN 2026

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

லீடர் (தமிழ்):லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லீடர்' திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ர... மேலும் பார்க்க