செய்திகள் :

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

post image

லீடர் (தமிழ்):

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லீடர்' திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால், அமிர்தா ஐயர், வி.டி.வி. கணேஷ், குழந்தை நட்சத்திரமான இயல் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காளிதாஸ் 2 (தமிழ்):

'காளிதாஸ்' படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நிவாஸ், அஜய் கார்த்தி, அபர்னத்தி, பவனி ஸ்ரீ, கார்த்திக் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவாக்கியுள்ள 'காளிதாஸ்' படத்தின் இரண்டாம் பாகம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Leader Movie
Leader Movie

நீளிரா (தமிழ்):

அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு, ரூபா கொடுவாயூர் ஆகியோர் நடித்துள்ள 'நீளிரா' திரைப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கார்மேனி செல்வம் (தமிழ்):

ராம் சக்ரி எழுதி இயக்கியிருக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியானது.

பைக்கர் (தெலுங்கு):

ஷர்வானந்த், ராஜசேகர், மாளவிகா நாயர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைக்கர்' நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வாழா 2 (மலையாளம்):

விபின் தாஸ் எழுதி தயாரித்திருக்கும் 'வாழா 2' திரைப்படத்தை சவின் சா இயக்கியுள்ளார். ஹஷீர், அலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வேதா சங்கர், விஜய் பாபு, பிஜு குட்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Biker Movie
Biker Movie

ஓடிடி ரிலீஸ்கள்:

ஹாப்பி பட்டேல் : கதர்நாக் ஜஸூஸ் (Happy Patel: Khatarnak Jasoos) (இந்தி) - Netflix
இஃபோரியா (Euphoria) (தெலுங்கு) - ETV Win
மிருத்யுஞ்சய் (Mrithyunjay) (தெலுங்கு) - Netflix
ஸம்ப்ரதாயிநீ சுப்பினி சுடபூசனி (Sampradayini Suppini Suddapoosani) (தெலுங்கு) - Netflix
வடம் (தமிழ்) - Sun NXT
மாயபிம்பம் (தமிழ்) - Sun NXT
சித்தாரே ஜமீ பர் (இந்தி) - SonyLIV
வத் 2 (Vadh 2) (ஹிந்தி) - Netflix

Mrunal Thakur: "சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், 'வேண்டாம்'னு சொல்லிடுவேன்" - மிருணாள்

'சீதா ராமம்’, 'ஹாய் நானா' படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருக... மேலும் பார்க்க

"சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட படம் தான் 'TN 2026'.! " - தம்பி ராமையா

தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான 'TN 2026'. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில்... மேலும் பார்க்க

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்" - மோகன் ராஜன் | வரித்துணையே 15

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

TN 2026: "அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்" - நட்டி நடராஜ் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த 'டி.என். 2026 தங்க நட்சத்திரம்' என்ற படம் அரசியல் நையாண்டி படமாகக் கவனம் ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அதன் டீஸரில் விஜய்யின் கெட... மேலும் பார்க்க

"விஜய் சார் போன்ற தோற்றம் வருமிடங்கள்.!" - விஜய் பற்றி நடிகர் நட்டி

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" - ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ... மேலும் பார்க்க