செய்திகள் :

RCB vs CSK: "நான் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றை (ஏப்ரல் 5) 11-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிம் டேவிட்டின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

csk vs rcb match
csk vs rcb match

கடினமான இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி, சர்பராஸ் கானின் அதிரடி அரைசதம் மற்றும் பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் ஆகியோரின் போராட்டத்திற்கு மத்தியிலும், 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "உண்மையைச் சொல்லப்போனால், இன்றைய ஆட்டத்தின் முடிவு எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் மற்றும் ஓரளவிற்கு சிவம் துபே ஆகியோரின் ஆட்டம்  பாராட்டுக்குரியது. பேட்டிங் முன்வரிசையில் நான் இன்னும் கூடுதல் பங்களிப்பை அளித்திருந்தால், ஒருவேளை இந்த இலக்கை நாங்கள் எட்டியிருக்கக்கூடும்.

ருதுராஜ்
ருதுராஜ்

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விராட் கோலி கொடுத்த அந்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஆட்டத்தின் வேகம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும்.

இருப்பினும், 13 மற்றும் 14-வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது, அதன் பிறகுதான் ஆட்டம் தலைகீழாக மாறியது. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் டிம் டேவிட்டின் ஆட்டம், ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றியது.

அன்ஷுல் வீசிய அந்தப் பந்து நோ-பால் பந்தாக அமைந்தது துரதிர்ஷ்டவசமானது. அதன் பிறகு டிம் டேவிட் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்தார். அவரது அந்த அதிரடி ஆட்டத்திற்குப் பாராட்டுகள்" என்று பேசியிருக்கிறார்.

RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" - வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு ச... மேலும் பார்க்க

RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" - ஆட்டநாயகன் டிம் டேவிட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கைத்... மேலும் பார்க்க

"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு ... மேலும் பார்க்க

GT vs RR: "பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியில் செய்தேன்.!"- ரவி பிஷ்னோய்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார... மேலும் பார்க்க

GT Vs RR: `அதற்கான ஆலோசனையை அவர்தான் அளித்தார்!' – வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் தொடரில் நேற்றைய (ஏப்ரல் 4) ஆட்டமான ராஜஸ்தான் vs குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இது வரை நடந்த போட்டிகளில் கடைசி வரை சென்று ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அ... மேலும் பார்க்க

GT Vs RR: "அந்த ஒரு சிக்ஸரை நான் அடித்திருக்க வேண்டும்!"– குஜராத் கேப்டன் ரஷித் கான் வருத்தம்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத்... மேலும் பார்க்க