செய்திகள் :

RCB vs CSK: "எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது உற்சாகமாக இருந்தது" - ஆட்டநாயகன் டிம் டேவிட்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இந்த இலக்கைத் துரத்திய சென்னை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டிம் டேவிட்
டிம் டேவிட்

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிம் டேவிட், " மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நல்ல ஸ்கோரை எட்டி, எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

எனது இயல்பான ஆட்டத்தை நான் மாற்றிக்கொள்வதில்லை. எனது பயிற்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவு எனக்கு பெரிய பலமாக இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் (பயிற்சியாளர்) போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருடன் இணைந்து செயல்படுவது எனது பாக்கியம்.

டிம் டேவிட்
டிம் டேவிட்

அவரிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்று வருகிறேன். ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளாக இருப்பதால், இப்போது தேவையற்ற அழுத்தங்களை நான் எடுத்துக் கொள்வதில்லை.

ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறேன். அதிரடி ஆட்டத்தில் ஈடுபடும்போது சில நாள்கள் சரியாக அமையாமல் போவதும் சகஜம்தான்" என்று பேசியிருக்கிறார்.

RCB vs CSK: "நான் இன்னும் சிறப்பாக ஆடியிருந்தால்..." - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றை(ஏப்ரல் 5) 11-வது லீக் போட்டியில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. முதலில்பேட்டிங்செய்த பெங்களூரு அணி, ட... மேலும் பார்க்க

RCB vs CSK: "டிம் டேவிட் பினிஷங், டஃபி ஓவர், சர்ப்ராஸ் விக்கெட்" - வெற்றி குறித்து ரஜத் பட்டிதார்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்.5) நடைபெற்ற பெங்களூரு vs சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் பௌலிங் தேர்வு ச... மேலும் பார்க்க

"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு ... மேலும் பார்க்க

GT vs RR: "பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியில் செய்தேன்.!"- ரவி பிஷ்னோய்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார... மேலும் பார்க்க

GT Vs RR: `அதற்கான ஆலோசனையை அவர்தான் அளித்தார்!' – வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் தொடரில் நேற்றைய (ஏப்ரல் 4) ஆட்டமான ராஜஸ்தான் vs குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இது வரை நடந்த போட்டிகளில் கடைசி வரை சென்று ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அ... மேலும் பார்க்க

GT Vs RR: "அந்த ஒரு சிக்ஸரை நான் அடித்திருக்க வேண்டும்!"– குஜராத் கேப்டன் ரஷித் கான் வருத்தம்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத்... மேலும் பார்க்க