செய்திகள் :

"ஆதவ் அர்ஜூனாவை இந்தப் படம் சங்கடப்படுத்தாது!" - தம்பி ராமையா! | TN 2026

post image

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.

நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

அந்த டீசர் வெளியானது முதல், இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றிய படம் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

படத்தைப் பற்றி இணையத்தில் பேசப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாகவும் படக்குழுவினரும் இந்நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார்கள்.

TN 2026
TN 2026

இந்த நிகழ்வில் தம்பி ராமையா பேசுகையில், "அரசியல் புரிதல் இருந்ததால்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

தம்பி நட்டியை, இந்தக் கதை நடிகராக அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகும் என்பதில் சினிமா ரசிகராக எனக்கு அத்தனை மகிழ்ச்சி.

இந்தக் கதையை நான் எழுதினேன். என் மகன் அதனை உள்வாங்கிக் கொண்டான். என் மகன் அதனை பிரமாதமாக எனக்கே எடுத்துக் காண்பித்துவிட்டார்.

இந்தக் கதையை சொல்லி தயாரிப்பாளரிடம் எப்படி அனுமதி வாங்கினேனோ, அதுபோல அர்ஜூன் சாரிடமும் 'என் மகன் இதனை இயக்கப் போகிறான்' எனக் கேட்டேன். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என நினைப்பவன் நான்.

தலைப்பு செய்திக்காக கவனம் ஈர்க்க நினைக்காதவன் நான். அர்ஜூன் சாருக்கு இரண்டு மகள்கள்தான். திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா அர்ஜூன் என்றே இருக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டேன்.

அவர்களுடைய குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பெயரை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும்." என்றவர், "தவெக-வின் தலைவர் விஜய்யுடன் நான் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். டீசரில் வந்த நட்டியின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு சில விஷயங்களை கணிப்பதாக சொல்கிறார்கள்.

Thambi Ramaiah & Umapathy
Thambi Ramaiah & Umapathy

என் வயதுக்கு நான் பொய் சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. ஏப்ரல் 10-ஆம் தேதிக்குப் பிறகு இத்திரைப்படம் மக்களுக்கு வந்துவிடும்.

ஆதவ் அர்ஜூனா, அவருடைய வாழ்க்கையைப் பற்றி மேடையில் கண்கலங்கி பேசியதைப் பார்த்து நானே நெகிழ்ந்து போய்விட்டேன். உங்களுடைய பெரியம்மாவான திலகவதி அம்மா, எனக்கும் அம்மாவைப் போன்றவர்தான்.

மேலோட்டமாக வந்த தகவல்களை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டுக் கொள்கிறேன். ஆதவ் அர்ஜூனாவை இத்திரைப்படம் நூலளவுகூட சங்கடப்படுத்தாது." என்றார்.

"விஜய் சார் போன்ற தோற்றம் வருமிடங்கள்.!" - விஜய் பற்றி நடிகர் நட்டி

தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் 'TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் ... மேலும் பார்க்க

"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" - ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ... மேலும் பார்க்க

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

லீடர் (தமிழ்):லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லீடர்' திரைப்படம். லெஜண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ர... மேலும் பார்க்க

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை - படமாக கவனம் பெறுகிறதா?

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த முட... மேலும் பார்க்க