செய்திகள் :

"நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்குச் சொல்லிவிட்டேன்" - ஊகங்களுக்கு விளக்கமளித்த அண்ணாமலை

post image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

கோவை சிங்காநல்லூரில் போட்டியிடலாமா என்பது குறித்து அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்ததாகவும், ஆனால் அந்தத் தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அண்ணாமலை பியூஷ் கோயிலைச் சந்தித்து, `நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை

இந்த நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``புதுச்சேரி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிரதமர் மோடி, இன்று கொச்சின் செல்வதற்கு முன்பாக தமிழக பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இது ஒரு வழக்கமான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக் கூட்டமே தவிர, இதில் சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை.

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நான் போட்டியிடுவது குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால் உண்மையில் நான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இதை நீண்ட நாள்களுக்கு முன்பே கட்சித் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டேன். பி.எல். சந்தோஷ், நிதின் நவீன் மற்றும் பி.எஸ். கோயல் போன்ற மேலிடத் தலைவர்களிடம் எனது விருப்பத்தை ஒரு வாரத்திற்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டேன்.

நான் ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுவதை விட, தமிழகம் முழுவதும் உள்ள 27 பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்வதையே கடமையாகக் கருதுகிறேன்.

அண்ணாமலை
அண்ணாமலை

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது, மற்ற வேட்பாளர்களுக்காக முழுமையாகப் பிரசாரம் செய்ய முடியவில்லையே என்ற ஒரு மனக்குறை எனக்கு இருந்தது. அதை இம்முறை சரிசெய்ய விரும்புகிறேன். தொண்டர்களின் ஏமாற்றத்தைப் புரிந்து கொள்கிறேன்.

அதேநேரம், எல்லாப் போர்களையும் ஒரே நேரத்தில் தொடுக்க முடியாது. 2026 தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க-வின் தவறுகளை மக்கள் முன் கொண்டு செல்வதே எனது தற்போதைய பணி. ஏப்ரல் 21-ம் தேதி வரை முழு கவனமும் பிரச்சாரத்தில் மட்டுமே இருக்கும். அதன் பிறகு மற்ற விஷயங்களைப் பேசலாம்" என்றார்.

கருணாநிதி, ஜெயலலிதா ராஜினாமா; அதிமுகவின் அசுர பாய்ச்சல், அனுதாப அலையால் வீழ்ந்த திமுக | 1991 ஆடுபுலி

அரசியல் ஆடுபுலி 12புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமா? என்று அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. இதற்கு முன்னதாக, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக... மேலும் பார்க்க

மகளிர் இட ஒதுக்கீடு: `சமமான பிரதிநிதித்துவமா அல்லது தேர்தல் வியூகமா?' - விவாதப் பொருளாகும் திட்டம்!

பெண்களுக்கு இட ஒதுக்கீடுநாடாளுமன்றம்மத்திய அரசு ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிது. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் க... மேலும் பார்க்க

குமரி: 6 வாக்காளர்களுக்காக 125 கி.மீ தூரம் பயணிக்கும் மின்னணு இயந்திரம்! ஏன் தெரியுமா?

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், வாக்குப்பதிவு மையங்களில் பணியாளர்களை நியமிக்கும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: TMC வேட்பாளர்களுக்கு நெருக்கடி; அடுத்தடுத்து பறக்கும் சம்மன் - கடுமையாக சாடும் மம்தா

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை மேற்கொள்ளும் நிலையில், திர... மேலும் பார்க்க

சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் - விமானியைத் தேடும் பணி தீவிரம்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வான்பரப்பில் பறந்து கொண்டிருந... மேலும் பார்க்க