செய்திகள் :

சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

post image

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ந்தேதி, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வழங்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 போலீஸ்காரர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இந்தத் தீர்ப்பினை பல தரப்பினரும் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், உண்மையை மறைக்க முயன்ற பிற அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

இதுகுறித்து அவரிடம் பேசினோம், ``சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் சரவணன் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தபட்ட போது,  அவர் , இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தவிட்டார்.  தொடர்ந்து, இருவருக்கும் உடற்தகுதிச் சான்றிதழ்  பெற, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அரசு மருத்துவர் வெண்ணிலா, சான்றிதழ் தர மறுத்துள்ளார். ஆய்வாளர் ஸ்ரீதரின்  வற்புறுத்தலால் 3 மணி நேரம் கழித்து சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ளார். அங்கிருந்து இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மருத்துவர் வெண்ணிலா யாரின் நிர்பந்தத்தில் உடல் தகுதிச்சான்றிதழ் வழங்கினார்? சாத்தான்குளத்தில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய  மாவட்ட மருத்துவமனையான தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும், கோவில்பட்டி  கிளைச்சிறைக்கும் அனுப்பியது ஏன்? தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தால் இருவரின் உயிராவது மிஞ்சியிருக்கும். அத்துடன் பணியில் இருந்த சாத்தான்குளம்,டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. மாவட்ட எஸ்.பியை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை. வெறும் இடமாற்றம் மட்டும் போதுமா? இந்த நிலையில்,  சிறையிலேயே அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தனர்.   ’பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும், ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்தார்’ என போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது.   

சாத்தான்குளம் காவல் நிலையம்

இது சரியான காரணமில்லை என்பது ஊருக்கே தெரியும். இந்த வழக்கில் உண்மையை மறைக்க முயன்ற அரசு அதிகாரிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் ’ரிமாண்ட்’க்கு உத்தரவிட்ட நீதிபதி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், காங்கிரஸின் வழக்கறிஞர்கள் பிரிவு,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்) கடந்த 2020-ம் ஆண்டு  ஜூலை 6-ம் தேதி உயர்நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

’ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள்’- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பேசியது என்ன?

கடந்த 2020 ஜூன் 19 ல் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ்ஸை காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்... மேலும் பார்க்க

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்'- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லா... மேலும் பார்க்க

13 ஆண்டுகள் கோமா; கண்ணியமாக இறக்க அனுமதித்த உச்ச நீதிமன்றம் - விடைபெற்றார் ஹரிஷ் ராணா!

சண்டிகரில், 2013ம் ஆண்டு கல்லூரிக் கட்டடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்த ஹரிஷ் ராணா என்பவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: "மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் காயங்கள்" - நீதிபதி

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

பாமக: `மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது!' - ராமதாஸ், அன்புமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி ராமதாஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவ... மேலும் பார்க்க

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு கு... மேலும் பார்க்க