செய்திகள் :

Trisha: ``தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன்..." - பதிலடி பதிவு

post image

சமீபகாலமாக தொடர்ந்து நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டதில் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள் வரை நடந்தது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பிரபலம் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா திரைத்துறையைவிட்டு விலகப்போவதாகத் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைப்பற்றி பரவிய வதந்திகளைக் கிண்டல் செய்யும் விதமாக பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

த்ரிஷா
த்ரிஷா

அதில், ``வெளிப்படையாகச் சொல்லப்போனால், நான் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன். ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயாக அவர்களை வளர்த்து வருகிறேன்! (இன்னும் ஏதாவது நான் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய கற்பனை கதை போதுமா?)" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் அவர் திரைத்துறையைவிட்டு விலகவில்லை என்பதையும், அவர் தொடர்ந்து நடிப்பார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் தொடர்பாக பகிரப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனை என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பதிவு வைரலாகியிருக்கிறது.

பிங்க் யானை: ரஷ்யப் புகைப்படக் கலைஞரின் வைரல் 'கலை' முயற்சிக்குக் கிளம்பிய எதிர்ப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கலைத் திட்டம் என்ற பெயரில் யானை ஒன்றிற்கு அடர் இளஞ்சிவப்பு (Dark Pink) வண்ணம் தீட்டிப் புகைப்படம் எடுத்த ரஷ்யப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவாவின் செயல், சமூக வலைதளங... மேலும் பார்க்க

Kuldeep: 'நண்பர்கள் படை; சஹாலின் நடனம்; ராயல் கல்யாணம்' - தோழியைக் கரம் பிடித்தார் குல்தீப்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது நீண்டகால தோழியான வன்ஷிகா சிங்கை நேற்று (சனிக்கிழமை மார்ச் 14) கரம் பிடித்தார். இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பை 2026 ... மேலும் பார்க்க

"அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது!" - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து சாதனை படைத்துள்ளார் 23 வயத... மேலும் பார்க்க

Rashmika Mandanna: `இப்படி உணர்ச்சிவசப்பட்டு ரொம்பநாள் ஆகுது' - ரஷ்மிகாவின் நெகிழ்ச்சிப் பதிவு!

சமீபத்தில் திரையுலக நட்சத்திரங்கள் திரும்பிப் பார்த்த நிகழ்வுகளில் ஒன்று நடிகர்கள் ரஷ்மிகா - விஜய்தேவரகொண்டா திருமணம். பிப்ரவரி 26 அன்று நடந்து முடிந்த திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா தன் சமூக ஊட... மேலும் பார்க்க