செய்திகள் :

"அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது!" - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

post image

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து சாதனை படைத்துள்ளார் 23 வயது இளம் விமானி தீபிகா அதானா.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் திகான் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமானியாகப் பணியாற்றும் தீபிகாவுக்கு, மார்ச் 6-ம் தேதி காலை திடீரென ஒரு அவசர உத்தரவு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா பகுதிக்குச் சென்று, அங்குள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்பதே அந்தப் பணி.

போர்க்களம் போன்ற சூழல் நிலவியதால், புறப்படுவதற்கு முன் தனது தாயிடம் பேசிய தீபிகா, "அம்மா, பை பை. நான் மீண்டும் உயிருடன் வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார்.

தீபிகா அதா
தீபிகா அதா

முதலில் இந்த விமானத்தை தீபிகாவின் தோழி இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தீபிகா அந்தப் பொறுப்பை ஏற்றார். கேப்டன் ஜஸ்விந்தர் கவுர், தீபிகா அதானா மற்றும் நான்கு பெண் பணியாளர்கள் என முழுவதுமே பெண்களைக் கொண்ட குழுவினர் இந்த ஆபத்தான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போர் பயம் இருந்தாலும், உரிய பாதுகாப்பு குறித்த நம்பிக்கையுடன் அவர்கள் விமானத்தைச் செலுத்தினர்.

பிற்பகல் 2 மணிக்கு ராஸ் அல் கைமா விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம், 169 இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு 3:30 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது ஒரு இக்கட்டான சூழலாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான (ATC) தொடர்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குழுவினர் பெரும் பதற்றமடைந்தனர். இருப்பினும், சில நிமிடங்களில் தொடர்பு மீட்கப்பட்டு, விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

பாதுகாப்பாகத் தாயகம் திரும்பிய பயணிகள், கண்ணீர் மல்க இந்த வீரப் பெண்மணிகளுக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Rashmika Mandanna: `இப்படி உணர்ச்சிவசப்பட்டு ரொம்பநாள் ஆகுது' - ரஷ்மிகாவின் நெகிழ்ச்சிப் பதிவு!

சமீபத்தில் திரையுலக நட்சத்திரங்கள் திரும்பிப் பார்த்த நிகழ்வுகளில் ஒன்று நடிகர்கள் ரஷ்மிகா - விஜய்தேவரகொண்டா திருமணம். பிப்ரவரி 26 அன்று நடந்து முடிந்த திருமணத்துக்குப் பிறகு நடிகை ரஷ்மிகா தன் சமூக ஊட... மேலும் பார்க்க

USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" - அமெரிக்கா!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அர... மேலும் பார்க்க

Shikhar Dhawan: `Almost the Dhawans' - திருமணம் குறித்து அறிவித்த ஷிகர் தவான்; மணமகள் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன் (Sophie Shine) என்பவரைத் திருமணம் செய்யவிருக்கிறார்.மன உளைச்சலுக்கு ஆளான ஷிகர் தவான்2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு ... மேலும் பார்க்க

A.R.Rahman: ``ஒரே ஒரு ரீல்ஸ்ல ஆரம்பிச்சது..." - ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடியது குறித்து அலெக்ஸ்

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், A.R. ரஹ்மானின் "The Wonderment Tour" என்ற கான்சர்ட், பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறத... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `137 படப் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை' - இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிரபல இசை நிறுவனமான 'சரிகம' (Saregama) இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ... மேலும் பார்க்க

மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?

இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹ... மேலும் பார்க்க