செய்திகள் :

ஆட்டோவுக்கு பயன்படுத்தும் LPGயை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பலாமா? பிரச்னை இல்லையா? | Explains

post image

நேற்று தமிழ்நாட்டில் பல ஃபில்லிங் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த வரிசை பெட்ரோல், டீசலுக்காக இல்லை.

வீட்டு உபயோகச் சிலிண்டர் விநியோகக் கட்டுப்பாடுகளால் 'முன்னெச்சரிக்கை' நடவடிக்கையாக, பலரும் ஆட்டோவிற்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸை பிடிக்கச் சிலிண்டர்களுடன் நின்றுகொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியாவில் பல நிலையங்களில் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.

அதனால், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, 'ஆட்டோவிற்கு எல்.பி.ஜி கேஸ்களை வீட்டு உபயோகச் சிலிண்டர்களில் பிடிப்பது தவறு' என்று உத்தரவிட்டது.

அதன் பின் தான், அந்த வரிசை மெல்ல மெல்லக் கலைய தொடங்கியது.

சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்
சர்வதேச பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் வளவன் அமுதன்

"ஈரான் போரினால் வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

ஆட்டோவிற்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி மற்றும் சமையல் சிலிண்டர்களில் இருக்கும் எல்.பி.ஜி - இரண்டுமே எல்.பி.ஜி எனப்படும் ஒரே எரிபொருள் குடும்பத்தைச் சேர்ந்தவை.

இதில் முக்கியமாக ப்ரோப்பேன் (C₃H₈) மற்றும் பியூட்டேன் (C₄H₁₀) என்ற ஹைட்ரோகார்பன் வாயுக்கள் கலவையாக உள்ளன. ஆகவே, ரசாயன ரீதியாக இரண்டும் எரியும் தன்மை கொண்டவை.

ஆனால், பயன்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விநியோக கட்டமைப்பு ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை.

வீட்டு எல்.பி.ஜி சமையலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 14.2 கிலோ சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு, குறைந்த அழுத்தத்தில் செயல்படும் ரெகுலேட்டர் மூலம் அடுப்பிற்கு வழங்கப்படுகிறது.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு
சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

மாறாக, ஆட்டோ LPG வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. வாகனங்களில் உயர் அழுத்த டேங்குகள், பல பாதுகாப்பு வால்வுகள் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் அது இயந்திரத்திற்கு வழங்கப்படுகிறது.

மேலும், ஆட்டோ எல்.பி.ஜியில் பொதுவாக ப்ரோப்பேன்–பியூட்டேன் 60:40 என்ற விகிதம் இருக்கும். இது வாகன இயந்திர எரிப்பை மேம்படுத்தும். வீட்டு LPG-யில் 40:60 என்ற விகிதம் இருந்து சமையலுக்கான நிலையான தீப்பற்றலை உறுதி செய்கிறது.

வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டரில் வாயு குறைந்த அழுத்தத்தில் இயங்குபவை. அதனை வாகனத்தில் பயன்படுத்தும்போது வாகனத்தின் திறன் தான் சற்று குறையும். எந்தப் பிரச்னையும் ஏற்படாது.

அதுவே அதிக அழுத்தம் கொண்ட ஆட்டோ எல்.பி.ஜி சிலிண்டர் வாயுக்களை வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது தீப்பிடிக்கவும், வெடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

சிலிண்டர்
சிலிண்டர்

இதனால், இரண்டும் ஒரே எல்.பி.ஜி குடும்பத்தைச் சேர்ந்தாலும் பயன்பாட்டு நோக்கம், பாதுகாப்பு அமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகள் வேறுபட்டவை.

இந்தியாவில் வீட்டு எல்.பி.ஜி மற்றும் ஆட்டோ எல்.பி.ஜி தனித்தனி விநியோக மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுகின்றன. எனவே ஆட்டோ எல்.பி.ஜியை வீட்டு எல்.பி.ஜிக்கு மாற்றாக பயன்படுத்துவது பாதுகாப்பானதோ சட்டபூர்வமானதோ அல்ல. வீட்டில் பயன்படுத்த வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட எல்.பி.ஜி சிலிண்டர் மற்றும் சமையல் உபகரணங்களே.

வீட்டு சிலிண்டரை காலியாக எல்.பி.ஜி பங்கிற்கு எடுத்து செல்லும்போது எந்தப் பிரச்னையும் ஏற்படாது . அதுவே, எல்.பி.ஜி பங்கிலிருந்து ஆட்டோ எல்.பி.ஜி வாயுவை வீட்டு சிலிண்டரில் நிரப்பி எடுத்து செல்லும்போது பாதுகாப்பான முறையில் வாயு வெளியேறாமல் இருக்கும் லாக் சீல் இடப்பட்டு இருக்கும் என்ற உத்தரவாதம் இருக்காது.

வீட்டு சிலிண்டரில் வாயு நிரப்பும் தொழிற்கூடத்தில் வாயு வெளியேறாமல் இருக்கும் லாக் சீல் பாதுகாப்பாக செக் செய்து அனுப்பப்படும்.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு
சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

தற்போதைய காலம் வெயில் காலமாதலால் வாயு வெளியேறாமல் இருக்கும் லாக் சீல் அதிகமான வெப்ப நிலையில் சேதமடையவும் வாய்ப்புகள் இருக்கிறது.

எனவே, எல்.பி.ஜி பங்கிலிருந்து ஆட்டோ எல்.பி.ஜி வாயுவை வீட்டு சிலிண்டரில் நிரப்பும் செயல் பாதுகாப்பானது அல்ல என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த மாதிரியான செயல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த சோதனைக் குழு அதிகாரிகள் மூலம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை விருதுகள் 2025: "நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா..." - மனம் திறந்த காளி வெங்கட்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருது 2025’-ல் `யதார்த்த திரைக்கலைஞன் விருது’ பெற்ற நடிகர் காளி வெங்கட், விழா மேடையில் தொகுப்பாளர்களுடன் உரையாடியது கலகலப்பாக இருந்தது.விருது வழங்கிய விகடன் குழுமத்துக்கு நன்ற... மேலும் பார்க்க

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க