செய்திகள் :

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

post image

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம்.

அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த்தார் சீமான். அவர் பேசிய வார்த்தைகள்...

``சிம்பு - சிலருக்கு நடிப்பு வரும்... சண்டைக்காட்சி வராது. சிலருக்கு நகைச்சுவை வராது. ஆனால், எல்லாத் திறமைகளையும்கொண்ட என் தம்பி இன்னும் அவனுக்குண்டான உச்சத்தைத் தொடவில்லை. அடுத்த படம் வரும்போது கண்டிப்பாக உச்சம் தொடுவான்.

சீமான்
சீமான்

பிரதீப் ரங்கநாதன் - `கோமாளி’ படம் பார்த்து வியந்துவிட்டேன். க்ளைமாக்ஸில், மழை வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியவரின் பெயர் 'ஜோசப்.’

சின்ன வயதிலேயே மத நல்லிணக்கம் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

மாதவன் - அவருக்கு எப்போதும் தமிழில் வாழ்த்து அனுப்புவேன். முன்பெல்லாம் சிரமப்பட்டார். ஆனால், இப்போது ஏஐ-யில் என் வாழ்த்தை மாற்றி எனக்கே காட்டுகிறார்.

விஜய் - அவருடைய `மெர்சல்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். `பிகில்’ திரைப்படத்தில் பெண்களை ஊக்கப்படுத்தி, 'வெளியே வா' என்கிற ஒரு காட்சி வரும். எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடிக்கும்.

உதயநிதி - அப்பா முதலமைச்சராக இருந்தாலும், அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் சகஜமாகப் பழகுவார். அவரும் எனக்கு தம்பிதான்.

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க

`தேர்தல் களம் சூடா இருக்கு; இந்த முறை மாற்றத்தை பார்ப்பீங்க!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விழா மேடையில் கலகலப்பாகப் பேசிய சீமானிடம், சின்னச் சின்னதாக சில கேள்விகளை முன்வைத்தோம். `புதிய புதிய கூட்டணிகள் உருவாகியிருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் களம் எ... மேலும் பார்க்க

``'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் 'சாதனைத் தொழில்நுட்பன்' விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...``கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை... மேலும் பார்க்க