செய்திகள் :

மதுரை வடக்கு தொகுதி: வெற்றி வாகைசூடும் திமுக; திட்டங்களைப் பட்டியலிடும் தளபதி!

post image

‘‘உதயசூரியன் களம் காணும் 175 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு இப்போதே உறுதி என்று கணிக்கப்படும் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதியும் ஒன்று'' என உறுதியாகச் சொல்கிறார்கள் மதுரை மக்கள்.

திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்குச் செய்த நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்!

“வண்டியூர் பூங்காவைச் சீரமைத்து தரமான நடைப்பயிற்சித் தளம் அமைச்சு கொடுத்திருக்கார்.”

“அரசு இராஜாஜி மருத்துவமனையை மேம்படுத்தி ஏழை எளியவர்களுக்கும் பலன் கிடைக்கச் செய்திருக்கிறார்.”

“கோரிப்பாளையம், மேலமடை மேம்பாலங்களைச் சீரமைத்து, போக்குவரத்து வசதி செஞ்சிருக்கார்.”

“கலைஞர் நூலகம், செல்லூர் பந்தல்குடி கால்வாய், ரேஸ்கோர்ஸில் ஹாக்கி மைதானம், புதிய தொழில்நுட்பப் பூங்கா, வைகை வடகரை சாலை, புதிய மாவட்ட நீதிமன்ற கட்டிடம், சட்டக் கல்லூரிக்குப் புதிய கட்டிடம், சாத்தமங்கலம் மாணவர் விடுதி, ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மேம்பாடு,

கே.கே.நகர் ஆறுவழிச்சாலை, புதிய வெங்காய மார்க்கெட் கட்டிடம்ஞ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தொகுதிக்கு எங்கள் தளபதி செஞ்சிருக்கும் வளர்ச்சிப் பணிகளை...” எனச் சிலாகித்துப் பேசுகிறார்கள் மதுரைக்காரர்கள்.

பிரசாரப் பயணம் மேற்கொண்டிருந்த தளபதியை நேரில் சந்தித்தால், ‘ரமணா’ பாணியில் புள்ளிவிவரங்களை அடுக்கி, ஆச்சரியப்படுத்தி விட்டார் அவர்!

திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ
திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ

“14 உயர்மின் கோபுர விளக்குகள், 13 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 45 தார்ச்சாலைகள், 17 நியாயவிலைக் கடைகள், 450 சிசிடிவி கேமராக்கள், 12 அங்கன்வாடி மையங்கள், 9 பொதுக்கழிப்பறைகள், 3 தூய்மைப் பணியாளர் அலுவலகங்கள்,

43 ஆழ்துளைக் கிணறுகள், 31 சிறு பாலங்கள், 3 பொது மயானங்கள், 10 பூங்காங்கள், 5 பேருந்து நிழற்குடைகள், 9 சமுதாயக் கூடங்கள், 12 பள்ளிக் கட்டிடங்கள், 10 மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் இவையெல்லாம் புதிதாக நிறைவேற்றியுள்ள வளர்ச்சிப் பணிகள்.

இவை தவிர, ஏற்கெனவே இருந்த பலவற்றை சீரமைத்து செப்பனிட்டுக் கொடுத்திருப்பதை விரிவாகப் பட்டியலிட்டால் ஆயிரக்கணக்கில் அது இருக்கும்ஞ்” என்றார் தளபதி.

“இதெல்லாம் டிரெய்லர் தாங்க. இந்த முறை ஜெயித்து வந்ததும் இன்னும் பலப்பல நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப் போகிறார் எங்கள் தளபதி” என அருகில் இருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் சொல்ல, “என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?” என்று தளபதியிடமே கேட்டோம். அதற்கும் பட்டியல் வைத்திருந்தார் மனிதர்!

“செல்லூர் கண்மாய், புதூர் கண்மாய் இரண்டையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். மக்கள்தொகை குறைவாக இருந்தபோது 6 இன்ச் கழிவுநீர்க் குழாயுடன் அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடைகளை, 12 இன்ச் குழாய்களுடன் மேம்படுத்தி, கழிவுநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

வண்டியூர் பூங்காவை மேலும் அழகாக்கி சுற்றுலாத் தலம் போல் மாற்ற வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டும்.

கே.கே.நகர், அண்ணா நகர், கற்பக நகர், சிங்கராயர் காலனி உட்பட பல இடங்களில் தரமான பூங்காக்கள் உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை எதிர்கொண்டு, முல்லை நகர் உட்பட பல பகுதிகளில் மக்களுக்கு பட்டா கிடைக்கச் செய்ய வேண்டும்.

தொகுதியின் ஒவ்வொரு தெருவுக்கும் மின்விளக்கு வசதிகளை மேம்படுத்தி, தூங்கா நகரமான மதுரையை விடியல் ஆட்சியில் ஒளிரும் நகரமாக மாற்ற வேண்டும்” என்றார்.

எதிர்த்துப் போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்களைப் பற்றி தொகுதியில் விசாரித்தபோது, கிடைத்த விவரங்கள் சிந்திக்க வைக்கின்றன.

திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ
திமுக வேட்பாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ

''கொலை கேஸில் நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்ட குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடுகிறார். அவரை போட்டியாளராகவே எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னொரு போட்டியாளரின் அரசியல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் பல விசித்திரங்கள் இருக்கும். 2011-ஆம் ஆண்டு திமுகவில் இருந்தவர்தான் அவர். சீட் கேட்டு, அது கிடைக்காததால் 2013-ல் மதிமுகவுக்குத் தாவினார். அதன் பின்னர் கடந்த 10 வருடங்களில் அதிமுக, பிஜேபி, மறுபடியும் அதிமுக எனப் பல கட்சிகளுக்குத் தாவியவர் அவர்.

காலாவதியான ஸ்டண்ட்டை பயன்படுத்தி இதய மருத்துவ சிகிச்சை அளித்து பேஷண்ட்களுக்குத் துரோகம் செய்த குற்றம் அவர்மீது வழக்காகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சீட்டுக்காக அரசியல் தாவுதல்கள் நடத்திக் கொண்டே இருக்கும் அவரையும், சீரியஸாக அரசியல் பணியில் திமுக ரத்தத்துடன் தொடர்ந்து மக்கள் பணியில் இருக்கும் எங்கள் தளபதியையும் ஒப்பிடவே கூடாது” - அடித்துப் பேசுகிறார்கள் மதுவை வடக்கு தொகுதியில் தளபதி அபிமானிகள்.

தளபதியை மதுரை மக்கள் ஏன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரிந்துபோனது. செய்தவற்றை கெத்தாக எடுத்துச் சொல்லி, செய்யப் போகிறவற்றையும் விலாவாரியாகப் பட்டியலிடும் செயல்வீரருக்கு வெற்றிதானே நிரந்தர அடையாளம்.

ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்' - என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `சௌமியா அன்புமணி வெல்வாரா?' - எல்லையோர மாவட்டங்களின் சிக்னல் என்ன?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

"பல்லாவரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" - தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் உறுதி

பல்லாவரம் அரசியல் களம் இந்த முறை சற்றே வித்தியாசமாகக் காட்சி தருகிறது. காரணம், புதிய முகம், ஆனால் பழைய சமூகப் பணியின் அடையாளம். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் காமாட்சி ஜெயகி... மேலும் பார்க்க

`தேர்தல் ஆணையத்திடம் பொறுப்பு இருக்கிறதுதான்; ஆனால், எங்கள் பிரசாரத்தை தடுப்பது திமுக'- விஜய் கடிதம்

தங்களுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது..."தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துக... மேலும் பார்க்க

ரூ.25,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டம்... கோவையைக் கலக்கும் செந்தில் பாலாஜி!

கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டை என்ற பிம்பத்தைச் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது செந்தில்பாலாஜியின் கோவை எண்ட்ரி. கோவை முழுக்க அவருக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பு அதிமுகவைக் கதிகலங்க வைத்திருக்கிறது... மேலும் பார்க்க