செய்திகள் :

TAX : நீங்கள் வரி சேமிக்கிறீர்களா அல்லது பணத்தை இழக்கிறீர்களா? | சிறப்பு நிகழ்ச்சி, மார்ச் 15

post image

கவனியுங்கள்... மார்ச் மாதம் வந்துவிட்டாலே பலருக்கும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அலுவலகத்திலிருந்து, "Investment Proof-ஐ சப்மிட் செய்யுங்கள், இல்லையென்றால் சம்பளத்தில் அதிக TDS பிடிக்கப்படும்" என்ற மெயில் வந்தவுடன்தான், பலரும் அவசர அவசரமாக டாக்ஸ் சேவிங் (Income Tax Saving) பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பார்கள்.

இந்தக் கடைசி நேரப் பதற்றத்தில், உங்களுக்குத் தெரிந்த ஏதோவொரு ஏஜென்ட் சொல்லும் சாதாரண ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திலோ, அல்லது 5 வருடம் பணத்தை முடக்கி வைக்கும், பணவீக்கத்தை விடக் குறைந்த வட்டி தரும் பேங்க் எஃப்.டியிலோ பணத்தைப் போட்டுவிட்டு "அப்பாடா, டாக்ஸ் சேவ் பண்ணியாச்சு" என்று பெருமூச்சு விடுவீர்கள்.

ஆனால், அது உண்மையா?

நீங்கள் வரி சேமிக்கிறீர்களா அல்லது பணத்தை இழக்கிறீர்களா?

ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், வரியைச் சேமிப்பதற்காக நீங்கள் செய்யும் அந்த அவசர முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் உங்கள் பணத்தின் மதிப்பை அழிக்கின்றன. வரி சேமிப்பு என்பது அரசாங்கத்திடம் இருந்து உங்கள் பணத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்ல; அந்தப் பணத்தை உங்கள் எதிர்காலத் தேவைக்காக, பணவீக்கத்தைத் தாண்டி வளர வைப்பதும் ஆகும்.

உதாரணமாக, வெறும் 5% அல்லது 6% வட்டி தரும் திட்டங்களில் பணத்தைப் போடுவதால் உங்களால் 30% வரியைச் சேமிக்க முடிந்தாலும், அந்த முதலீடு உங்களின் பிள்ளையின் கல்லூரிப் படிப்புக்கோ அல்லது உங்களின் ஓய்வுக்காலத்துக்கோ எந்த வகையிலும் உதவாது. ஆயிரக்கணக்கில் சேமித்து, லட்சக்கணக்கில் வளர்ச்சியை இழந்துவிடுகிறோம்.

income tax
income tax - வரி

சரியான வரித் திட்டமிடல் (Personal Tax Planning) எப்படி இருக்க வேண்டும்?

  • பழைய விதியா, புதிய விதியா? (Old vs New Regime): எந்த வரி விதிப்பு முறை உங்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதை உங்கள் சம்பள வரம்புக்கு ஏற்பத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.

  • முதலீடு + வளர்ச்சி (Tax Saving with Wealth Creation): 80C-ன் கீழ் வரும் ELSS (Equity Linked Savings Scheme) போன்ற திட்டங்கள் மூலம் வரியையும் சேமித்து, அதேசமயம் பங்குச்சந்தையின் நீண்டகால வளர்ச்சியிலும் லாபம் பார்க்க முடியும்.

  • கழிவுகள் மற்றும் விலக்குகள் (Deductions & Exemptions): வீட்டுக் கடன், மருத்துவக் காப்பீடு (Health Insurance) மற்றும் NPS போன்றவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தினால், சட்டபூர்வமாகவே பல லட்சம் ரூபாயை வரியிலிருந்து காப்பாற்றலாம்.

  • இலக்குகளோடு இணைத்தல்: நீங்கள் செய்யும் வரி சேமிப்பு முதலீடு, உங்கள் குழந்தையின் கல்வி, திருமணம் அல்லது உங்களின் ஓய்வுக்காலம் போன்ற நீண்டகால இலக்குகளோடு (Long-term goals) இணைந்திருக்க வேண்டும்.

மார்ச் 31-க்குள் உங்கள் வரியைச் சேமிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தக் கடைசி நேரத்தில் எதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது? எந்தெந்தத் தவறுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்? வரி சேமிப்புக்கான செக்லிஸ்ட் (Checklist) என்ன?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவே ஒரு பிரத்யேகமான ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது மியூச்சுவல் ஃபண்ட விநியோக நிறுவனமான 'லாபம்'.

Tax special webinar march 15, 2026

கடைசி நேரப் பதற்றம் வேண்டாம்... சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள்!

தலைப்பு: தனிநபர் வரித் திட்டமிடல் செய்வது எப்படி? (FY 2026 Year-End Special Guidance Session)

நாள்: மார்ச் 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 11:00 மணி

பேச்சாளர்: எழில் முருகன், நிறுவனர் மற்றும் இயக்குநர், Wealth Seva.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வரி சேமிப்பு என்ற பெயரில் பணத்தை முடக்கி வைக்கும் தவறான முதலீடுகளைத் தவிர்க்க, சம்பளதாரர்கள் மற்றும் சிறு தொழில் செய்வோர் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது. 50 பேருக்கு மட்டுமே அனுமதி. இன்றே பதிவு செய்யுங்கள், உங்கள் பணத்தை ஸ்மார்ட்டாகச் சேமித்து வளர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

ஊர் திரும்பும் ஐடியா இருக்கா? NRI-களுக்கான சிறந்த Lumpsum முதலீடு & மாத வருமானத் திட்டம்!

குடும்பத்தை விட்டு பல ஆயிரம் மைல்கள் தள்ளி, வெளிநாட்டில் இரவு பகலாக உழைக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணத்தை அங்கே சரியாகத்தான் நிர்வகிக்கிறீர்களா?கீழே உள்ள இந்த 'NRI செக்லிஸ்ட்ட... மேலும் பார்க்க

மின் கட்டணத்துக்கு முடிவு... ரூ.25,000 முன்பணத்தில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்... எப்படி?

வேலை இன்மை, வருமானம் குறைவு போன்ற சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் மக்களின் ஒவ்வொரு ரூபாயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருமானம் இல்லாவிட்டாலும் சில செலவுகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அவற்றில... மேலும் பார்க்க

தங்கமா, பங்குச் சந்தையா... எதில் முதலீடு செய்தால் லாபம்? - வாங்க தெரிஞ்சிக்கலாம்!

பலருக்கும் எதில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்ற கேள்வி இருக்கிறது. தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் இருக்கும் சூழலில், ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஃபண்டுகளைவிட தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! - தங்கம் இனியும் லாபம் தருமா?

ஆங்கிலத்தில் 'Euphoria' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதீத உற்சாகம் என்று இதனைத் தமிழ்ப்படுத்தலாம். இந்த அதீதமான உற்சாக நிலை வந்துவிட்டால் போதும், மக்கள் தலைகால் புரியாமல் செயல்படத் தொடங்குவார்கள். அ... மேலும் பார்க்க

கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்!

நீங்கள் 50 வயதைக் கடந்தவரா? ரிட்டயர்மென்ட் பணமாகஒரு பெரிய தொகை கையில் இருக்கிறதா? அல்லது வரப்போகிறதா? வயதான காலத்தில் மருத்துவச்செலவுகள்தான்உங்களதுபெரிய பிரச்னை என்று நினைப்பீர்கள்.ஆனால், தமிழ்நாட்டுப... மேலும் பார்க்க

அன்று 2,000 கோடி கடன், பாக்கெட் காலி; ஆனால் இன்று..! - எலான் மஸ்க்கின் வாழ்க்கைப் பாடம்

2008-ம் ஆண்டு. உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரம். ஆனால் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உலகம் அதைவிட மோசமாகச் சிதைந்து கொண்டிருந்தது. பொறியில் மாட்டிய எலியாய், மஸ்க் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் ... மேலும் பார்க்க