புதுச்சேரி: மாநில அந்தஸ்து தரவில்லை என்றால் தேர்தல் கிடையாது! - பேரவையில் நடந்த ...
கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்!
நீங்கள் 50 வயதைக் கடந்தவரா? ரிட்டயர்மென்ட் பணமாக ஒரு பெரிய தொகை கையில் இருக்கிறதா? அல்லது வரப்போகிறதா? வயதான காலத்தில் மருத்துவச் செலவுகள்தான் உங்களது பெரிய பிரச்னை என்று நினைப்பீர்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பெற்றோரின் நிஜமான எதிரி அதுவல்ல. உங்கள் மிகப்பெரிய எதிரி:
"அளவுக்கு அதிகமான பாசம்!".
இதுதான் உண்மை நிலவரம்:
50 வயது வரை ஓயாமல் உழைத்தீர்கள். PF, Gratuity, FD என்று ஒரு தொகை கையில் வருகிறது. ஆனால், அடுத்த சில வருடங்களில் என்ன நடக்கிறது தெரியுமா?
"பையன் மேற்படிப்புக்கு ஃபாரின் போறான்..." ₹20 லட்சம் காலி.
"பொண்ணு கல்யாணத்தை கிராண்டா பண்ணனும்..." ₹25 லட்சம் காலி.
"சொந்த ஊர்ல ஒரு வீடு கட்டணும்..." ₹30 லட்சம் காலி.
கடைசியில், 60 வயதில் நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது, உங்கள் கையில் மிஞ்சுவது பூஜ்ஜியம். பிறகு, ஒவ்வொரு மாதமும் மருந்து மாத்திரைக்கும், சிறிய செலவுகளுக்கும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை. "அப்பா, போன மாசம்தானே பணம் கொடுத்தேன்?" என்று மகன் கேட்கும்போது வரும் அந்த வலி... அது மரணத்தை விடக் கொடியது.
3 மாத பரிசோதனை...
இன்றே உங்கள் வங்கி ஸ்டேட்மெண்டை எடுங்கள். கடந்த 3 மாதங்களில், உங்கள் சொந்த சந்தோஷத்திற்காக (மருந்து, சாப்பாடு தவிர்த்து) எவ்வளவு செலவு செய்தீர்கள்? பிள்ளைகளுக்காக எவ்வளவு செலவு செய்தீர்கள்
விடை: 90% பிள்ளைகளுக்கு, 10% உங்களுக்கு என்றால் இது தியாகம் அல்ல; தற்கொலைக்குச் சமம். உங்கள் ஓய்வுக்காலப் பணத்தை (Retirement Corpus) பிள்ளைகளுக்காக முழுவதுமாக அளிப்பது, எதிர்காலத்தில் உங்களையே அவர்களுக்குச் சுமையாக்கி விடும்.

முதலில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
விமானப் பயணங்களில் சொல்வது போல, முதலில் உங்களுக்கு ஆக்சிஜன் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். பிறகு பக்கத்தில் இருப்பவருக்கு உதவலாம்.
உங்கள் பங்கு: உங்களிடம் உள்ள மொத்தத் தொகையில், 60-70% பணத்தை உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான மருத்துவச் செலவுக்கும், மாத வருமானத்திற்கும் (SWP) தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.
பிள்ளைகள் பங்கு: மீதமுள்ள 30-40% பணத்தை மட்டும் பிள்ளைகளின் படிப்புக்கோ, திருமணத்துக்கோ கொடுங்கள். அதற்கு மேல் தேவைப்பட்டால், அவர்களைக் கல்விக்கடன் (Education Loan) எடுக்கச் சொல்லுங்கள். அவர்கள் சம்பாதித்துக் கட்டுவார்கள்.
பாதுகாப்பு வளையம்: உங்கள் பணத்தை FD-ல் போட்டு வைத்துவிட்டு, வட்டி குறைகிறதே என்று கவலைப்படாமல், பணவீக்கத்தைத் தாண்டி வளரக்கூடிய பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் (Hybrid/SWP) திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
இதைச் செய்தால்...
70 வயதிலும், "யாரு கிட்டயும் கையேந்தி நிக்காம ராஜா மாதிரி வாழ்றேன்" என்ற கெத்து இருக்கும். பிள்ளைகளுக்குச் சுமையாக இல்லாமல் இருப்பதே, நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி என்பதை இனிமேலாவது உணருங்கள்.
ஆனால், இதைச் செயல்படுத்த தைரியம் மட்டும் போதாது; சரியான திட்டமிடல் தேவை. தவறான இடத்தில் முதலீடு செய்து பணத்தை இழக்காதீர்கள். ஏனென்றால் ஓய்வுக்காலம் என்பது ரீ-டேக் இல்லாத சினிமா போன்றது!

கடைசி காலத்தை, கண்ணியமாக வாழ இன்றே முடிவெடுங்கள்.
உங்கள் பணம் வளர்ச்சியும் பெற வேண்டும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமா? உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வது? எப்படிப் பாதுகாப்பது? வரி போக மாதம் ஒரு தொகையை பென்ஷனாக எப்படிப் பெறுவது? அனைத்தையும் அறிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' ரிலேஷன்ஷிப் மேனேஜருடன் இன்றே பேசுங்கள். உங்கள் அழைப்பை புக் செய்ய, இங்கே கிளிக் செய்யவும்:
https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
லாபம், AMFI (Association of Mutual Funds in India) அமைப்பின் அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும். AMFI பதிவு எண் - 310095. இந்தியா மட்டுமல்லாது மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 18 நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிம்மதியான எதிர்காலத்துக்கு லாபம் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடு தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களுக்கு, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே சொடுக்கவும்.
பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்ட ஆவணங்களை சரியாக படித்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.



















