Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்
நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்
மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செயலாளருக்கு இந்த மிரட்டல் வந்திருந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் இப்போது நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கானின் கணவர் ஆயுஷ் சர்மாவிற்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்கிடமிருந்து மிரட்டல் வந்திருக்கிறது. இமெயில் மூலம் இக்கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதனை அனுப்பியவர் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளான். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் மற்றும் ஆயுஷ் சர்மா ஆகிய இரண்டு பேருக்கும் வந்திருக்கும் மிரட்டல் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்ஆப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை மறைக்க வி.பி.என்((Virtual Private Network) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருந்தனர்.

ஆனால் ஆயுஷ் சர்மாவிற்கு புரோடான் மெயின் மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். இக்கொலை மிரட்டலை விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் விழிப்புடன் இருக்கும் படியும் தேவைப்பட்டால் பாதுகாப்பு கேட்கும்படி ஆயுஷ் சர்மாவிடம் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஐந்து பேர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆயுதங்களை கொடுத்து உதவிய லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஆசாராம் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர்கள் 12 பேரிடம் பணம் கேட்டுமிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானின் வீட்டின் மீது இதே கேங்க் துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தது.



















