செய்திகள் :

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

post image

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது

`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராடியவர்களின் கோரிக்கையை ஏற்று, 719 பேருக்கு பிப்ரவரி 13 -ஆம் தேதி முதல்வர் தலைமையில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது' என கடந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அறிவித்திருந்தார், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

தற்போது இந்த நிகழ்ச்சிதான் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்களுக்கு இன்று அனுப்பியிருக்கும் தகவல் இதுதான்...

covid

''இன்று நமது MRB COVID செவிலியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், 719 செவிலியர்களுக்கான பணி நியமன விழா குறித்து சுகாதாரத்துறை இயக்குநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அந்த சந்திப்பில், 719 செவிலியர்கள் 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் 75% விவரங்கள் மட்டுமே சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாம்.

குறிப்பாக சென்னை கே.எம்.சி உள்ளிட்ட மற்றும் சில மருத்துவமனைகளில் இருந்து மேற்படி தகவல்கள் டி.எம்.எஸ் அலுவலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோவிட் சமயத்தில் பணியில் சேர்ந்தவர்கள் பணி நிறைவு பெறும் வரை பணியாற்றிய காலத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாலும் தகுதியுடைய செவிலியர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு கருதுவதாலும், நாளைய பணி நியமன விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்கிற தகவலைத் தந்துள்ளார்கள்.

சுகாதாரத்துறை வட்டாரங்களில் பேசியபோது, 'கோவிட் காலத்தில் முழுமையாகப் பணிபுரியாத சிலர் எப்படியோ பணி நியமனம் பெற்று விட்டதாக சில புகார்கள் வரப் பெற்றன. எனவே இந்த முறை அரசு தீவிரமாக விசாரித்து தகுதி உடையவர்களுக்கு மட்டும் பணி கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கால தாமதம்' என்கிறார்கள் அவர்கள்.

மா. சுப்பிரமணியன்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவிட் காலத்தில் பணிபுரிந்து தற்போது வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் நாளை தங்களுக்கு வேலை கிடைத்துவிடுமென்கிற மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு சிறு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

கோவிட் சமயத்தில் பணிபுரிந்து நிரந்தரமான வேலைக்காகக் காத்திருக்கும் செவிலியர் ஒருவரிடம் பேசியபோது, 'ஐந்து வருடங்களுக்கு மேல ஆகிடுச்சு. திமுக அரசு ஆட்சிக்கு வந்த போதே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்னு நினைச்சோம். ஆனா அவங்க ஆட்சியே முடியப் போகுது. ஆட்சி முடிவடைவதற்குள் பணி கிடைச்சா நிம்மதியா இருக்கும்னு நினைச்சோம். அது நடக்கலை. இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுடுச்சுன்னா வேலை அவ்ளோதானு பயப்படுறோம். கோவிட்ல உயிரைப் பணயம் வச்சு வேலை செஞ்ச எங்களை அரசு ஏன் இந்தப் பாடுபடுத்துது தெரியலை' என்றார் குமுறலாக.

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தே... மேலும் பார்க்க