செய்திகள் :

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

post image

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

 அப்போது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம், ``சகோதரி, மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி விடாதீர்கள்" என திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக பேசினார்.

பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "கௌரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளோம்.

 அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிஜேபி மற்றும் கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவித்து இங்கு வந்துள்ளேன்.

யுஜிசி பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உட்பட 5 கோரிக்கைகளையும் வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 9ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

ஒன்றரை அமாவாசை முடிந்து பௌர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். உங்களது கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது உங்களது கனவு என்னவென்று கூறுங்கள் என கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும் என தற்போது ஆசிரியர்கள் கூறுகின்றனர். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இவர்களை விடுங்கள் அங்கன்வாடியினர், ஆசிரியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடிக் கொண்டு வருகின்றனர்.

நேற்று பாராளுமன்றத்தில் நேருக்கு நேராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆணி அடித்தது போல் எதிர்க்கட்சிக்கு பதில் கூறியுள்ளார்.

 காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகள் எந்தெந்த காலத்தில் என்னென்ன தவறு செய்தார்கள்.... எத்தனை திட்டங்கள் விடுபட்டுள்ளது. அதை அனைத்தையும் பாஜக செய்துள்ளது. மோசமான ஆட்சி என்று கிழித்துவிட்டார். அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டும். ரயில் நிலையம் மற்றும் பத்து ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில்தான் கேட்க வேண்டும்.  மத்திய அரசாங்கத்திடம்தான் மாநில அரசாங்கம் கேட்க வேண்டும்.

திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. தற்போது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர். திமுக வந்தார்களா? வரமாட்டார்கள் நாங்கள்தான் வரவேண்டும்" என்றார்.

புதுச்சேரி: மாநில அந்தஸ்து தரவில்லை என்றால் தேர்தல் கிடையாது! - பேரவையில் நடந்த பரபரப்பு வாதம்

``போலி மருந்தால் இறந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டும்...”புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் நடைபெற இருப்பதால் 2026-27 நிதியாண்டு... மேலும் பார்க்க

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க