இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்...
2026-ம் ஆண்டில் எதில் முதலீடு செய்தால் லாபம்? - வழிகாட்டும் Magic Money கருத்தரங்கு!
இன்றைய தலைமுறையினர் தங்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள முதலீடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடு கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை, கிரிப்டோகரன்சி எனப் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதால், லாபகரமான முதலீட்டுப் பாதையை வகுத்துக்கொள்ள நிதி அறிவு பெறுதல் அவசியமாக மாறியுள்ளது.
எனவே, முதலீட்டாளர்களை சரியான பாதையில் வழிநடத்தும் நோக்கத்துடன் ‘Magic Money TN summit’ என்ற கருத்தரங்கு ‘மேஜிக் 20 தமிழ்’ நிறுவனத்தின் சார்பில் நடத்த உள்ளது. பல நிறுவனத் தலைவர்கள், நிதி நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு, சமகால முதலீட்டு நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.
தங்கமா, பங்குச் சந்தையா, ரியல் எஸ்டேட்டா எதில் முதலீடு செய்வது? என்ற கேள்விதான் பலரிடம் நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், அறிவுசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்தக் கருத்தரங்கம் அமையும்.

முதலீடு மற்றும் நிதித் துறையில் தற்போது நிலவும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் தளமாக இது அமையவுள்ளது. இந்தக் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 07-ஆம் தேதி நாள் முழுவதும் கோயம்புத்தூர் மெர்லிஸ் ஹோட்டலில் (Merlis Hotel) நடக்க இருக்கிறது.
இந்தக் கருத்தரங்கின் மையக்கரு (Central Theme) 2026-ல் முதலீட்டுச் சந்தையின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நிபுணர்களின் அமர்வுகள் (Panel Discussions) நடைபெறுகிறது. சந்தையில் காளைகளின் ஓட்டம் (Bull Run) மற்றும் கரடிகளின் தாக்கம் (Bear Market) என இரு பக்கங்களையும் தாண்டி, முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிஜமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

முதலீடு மற்றும் நிதி நிர்வாகத் துறையில் அனுபவம் வாய்ந்த ஜாம்பவான்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்:
ஷியாம் சேகர் (Shyam Shekar, ITHOUGHT PMS) : இவர் ‘மிட் மற்றும் ஸ்மால்- கேப் முதலீட்டில் பொறுப்பான ரிஸ்க் எடுப்பது: முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை’ (‘Responsible Risk - Taking in Mid - & Small-cap Investing: What Investors Need to know’) என்ற மிக முக்கியமான தலைப்பில் பேசவுள்ளார்.

கணேஷ் ராம் (Ganesh Ram MD & CEO of MF Utilities ) இவர் ‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் அதன் எதிர்காலம்’ (Mutual Funds and its Near future) குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.
டாக்டர் எஸ். கார்த்திகேயன் (Dr. S. Karthikeyan): இவர் Emotions, Biases, and the Art of Investing என்ற தலைப்பில் உளவியல் ரீதியான முதலீட்டு அணுகுமுறைகளை விளக்கவுள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில் சிவராமகிருஷ்ணன் Sincere Syndication, மணிகண்டன் Addissia CEO, முனீர் Bharathi Homes, GoZen CEO அம்பி மூர்த்தி, கிரியா யுனிவர்சிட்டி செயல் இயக்குநர் ராமநாதன் ஹரிஹரன், காம்ட்ரெண்ட்ஸ் ஞானசேகர் தியாகராஜன், GoStocks CEO மார்கபந்து, பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ், சுந்தரம் ஏ.எம்.சி ஈக்விட்டீஸ் தலைவர் பார்த், நேச்சுரல்ஸ் நிறுவனர் சி.கே.குமரவேல் போன்ற பல தொழில் துறை வல்லுநர்கள் (Industrial Experts) மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
பதிவு செய்ய : CLICK HERE
More Details : CLICK HERE
Contact: 8148718103



















