செய்திகள் :

`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்' - வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

post image

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிர்வாகம் தனக்கென தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. இக்கொள்கையின் அடிப்படையில் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம் கொடுத்துக்கொண்டிருந்தது. இதையடுத்து வாட்ஸ்அப் நிர்வாகத்திற்கு மத்திய அரசின் காம்பெட்டீசன் கமிஷன் ஆஃப் இந்தியா ரூ.213 கோடி அபராதம் விதித்து இருந்தது. அதை எதிர்த்து மெட்டா நிறுவனமும், வாட்ஸ்அப் நிர்வாகமும் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. இம்மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ''தரவு பகிர்வு என்ற பெயரில் இந்த நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது. நீங்கள் உறுதிமொழி வழங்காத வரை தரவின் (டேட்டா) ஒரு வார்த்தையைக்கூட பகிர்ந்து கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

குடிமக்களின் தனியுரிமையை நீங்கள் மீற முடியாது, நாட்டின் விதிகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறலாம்" என்று அவர் கூறினார்.

உடனே அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, வணிக நோக்கங்களுக்காக பயனர் தரவைப் பகிர்வதாக வாட்ஸ்அப்பை விமர்சித்தார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ``இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பின்பற்றவில்லையெனில் இந்தியாவில் இருந்து வெளியேறலாம். பொதுமக்கள் யாரின் தனியுரிமையிலும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

வாட்ஸ்அப் நிர்வாகத்தின் தனியுரிமை சட்டத்தை, படிக்காத மற்றும் ஏழை மக்களால் புரிந்து கொள்ள முடியுமா? தெருவில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரி, ஏழை பெண்கள் அல்லது தமிழ் மட்டுமே பேசத்தெரிந்தவர்களால் இந்த தனியுரிமைக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியும?

டாக்டர் வாட்ஸ்அப்பில் மருந்துகள் பட்டியலை அனுப்பினால் நீங்கள் உடனே விளம்பரத்தை ஓடவிடுகிறீர்கள்'' என்று தெரிவித்தார். 2024ம் ஆண்டு வாட்ஸ்அப் வெளியிட்ட தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டுமானால் மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ள பயனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்தே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.குடும்பத்த... மேலும் பார்க்க

"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக்கொண்டிருந்தபோது 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றைக் கண்டெடுத்தார். அடுத்த ஒரு மணி நே... மேலும் பார்க்க

அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதி - வழங்கினார் ரமேஷ் ஸ்ரீநிவாசன், CEO, Agilysys Inc.,USA

'அக்ஷயம் 365' என்பது 'MUDRA OOH' நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி ஆகும். இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இ... மேலும் பார்க்க

மோமோ சாப்பிட ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுத்த சிறுவன்; அதிர்ந்த பெற்றோர்... என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருப்பவர் விம்லேஷ் மிஸ்ரா. இவர் அங்குள்ள தியோரியா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு ம... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பசுவைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பரவிய தகவல்; கடைகள், வீடுகளுக்குத் தீ வைப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் பசு மாடு ஒன்றை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தம்ஜிபுரா என்ற இடத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ... மேலும் பார்க்க