செய்திகள் :

நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! - அசத்தும் அரசு பள்ளி மாணவி

post image

தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி - கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்பில் அதீத நாட்டம் செலுத்தி வருகிறார். அருகில் உள்ள புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு வரை படித்த மாணவி பிரேமா, அரசு பொதுத் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவராக அசத்தியிருக்கிறார்.

மாணவி பிரேமா

இந்த மதிப்பெண் மூலம் குன்னூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 11 மற்றும் 12- ம் வகுப்பு பயில தேர்வாகியிருக்கிறார். அங்கும் சிறப்பாக கல்வி பயின்ற மாணவி பிரேமா, தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன் வெளிநாட்டில் கல்வி பயிலும் சிறப்பு திட்டத்தில் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெற்ற மாணவி பிரேமா, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நான்கு வருட பொறியியல் கல்வி பயில தேர்வாகியிருக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர் வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரேமா, முதல் தலைமுறை `பட்டதாரி' ஆகப்போகும் பெருமிதத்துடன், பட்டப்படிப்பு உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், "மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர். அரசின் மாதிரிப் பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார்.

மாணவி பிரேமா

தமிழ்நாடு அரசின் முழு செலவில் மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காண்டு பொறியியல் படிப்பான தரவு அறிவியல் கல்வியை பயில இருக்கிறார். அயராத உழைப்பாலும் கல்வி மீதான அதீத ஈடுபாட்டாலும் இன்றைக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அரசு பள்ளியில் பயின்றால் எந்த உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு மாணவி பிரேமா நல்ல முன்னுதாரணம்" என்றார்.

வாழ்த்துகள் பிரேமா!!!

தேயிலை தோட்டத்துச் சிறு செடி, விருட்சமாகி வான் தொடட்டும்!

`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க' - திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர்

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கி... மேலும் பார்க்க

தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இ... மேலும் பார்க்க

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது.விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:``உலகிலேயே முதல் முதலாக நடிகர் ஒருவர் அரசியல் தலைவராகி மக்களின் ஆத... மேலும் பார்க்க

`பெண்களால் ஆழமான கருத்துகளை முன்வைக்க முடியும்.!” - எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் | Chennai Book Fair

ஒரு ஆணின் பார்வையில், ஆண் எழுதும் எழுத்துக்களே பெரிதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண்ணின் பார்வையும், கருத்தும், எழுத்தும் பதிவு செய்யப்படுவது அவசியமாகிறது.அதற்கான ஒரு வெளியை உருவாக்க, பெண்களுக்கா... மேலும் பார்க்க

`எங்கள் கதையை எங்களால்தான் எழுத முடியும் என்பதன் விளைவுதான் திருநங்கை ப்ரஸ்!' - நிறுவனர் கிரேஸ் பானு

தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம... மேலும் பார்க்க