ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!
`என் ஆளுங்களுக்கு ஒரு மேடை; அதனால..!' - தவெக மேடையில் பாடி ஆடிய வேல்முருகன் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
விழா மேடையில் அரசியல் நோக்கத்துடன் முருகக் கடவுளை இழுத்துப் பாடியது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த விழாவில் அவர் பாட்டு பாடிய போது விஜய்யும் அவருடன் டான்ஸ் ஆடியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுகவின் ஜெயக்குமார் விஜய் டான்ஸ் ஆடியதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

வேல்முருகன் பாடிய பாடலில் ' கொள்ளையடித்த கூட்டம்' என்பன போன்ற வார்த்தைகளெல்லாம் இடம் இருந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
'வேல்முருகன் எல்லோருக்கும் பொதுவான சிறந்த நாட்டுப்புறப் பாடகர், அவர் இவர்களது அரசியலில் சிக்கியிருக்க கூடாது' எனச் சிலரும், 'வேல்முருகன் பாடியது சரியே, விஜய்க்கு இருக்கும் ஆதரவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்' என தவெகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேல்முருகனிடமே பேசினோம்.
``நான் எல்லோருக்கும் பொதுவான ஆள், பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னைக் கட்டிப் பிடித்தார். உதயநிதிக்கு 'வேணாம் மச்சான்' பாட்டு பாடியிருக்கேன். அதனால வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு?
மூணாவது வருஷ தொடக்க விழானு கச்சேரிக்குக் கூப்பிட்டாங்க. என்னை நம்பி என் கூட இருக்கிறவங்களுக்கு பாட ஒரு மேடையும் நாலு காசும் கிடைக்கும்கிறதால போய் பாடினேன். நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க. மத்தபடி இது குறித்துப் பேசறதுக்கு எதுவுமில்லை" என முடித்துக் கொன்டார்.



















