செய்திகள் :

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியம்... எப்படி தெரியுமா?

post image

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியமா?


ஆம்! இது சாத்தியமே.

பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதம் ₹20,000 முதலீடு செய்து, அதை ஆண்டுக்கு ₹1,500 வீதம் ஸ்டெப் அப் (Step-Up) செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்த முதலீட்டுக்கு சராசரியாக 12%  வருமானம் கிடைத்தால், சுமார் 12 ஆண்டுகளில் ₹1 கோடி சேர்க்க முடியும்.

இது எப்படி சாத்தியம்? இதன் ரகசியம் டாப் அப் எஸ்.ஐ.பி முறைதான்.

எஸ்.ஐ.பி SIP
கௌஷிக் கேதாரம், நிறுவனர், www.intelli360.in

டாப் அப் எஸ்.ஐ.பி என்றால் என்ன?

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, உங்கள் மாத எஸ்.ஐ.பி தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை அல்லது சதவீதம் உயர்த்துவது ஆகும்.
உதாரணமாக:

  • 1 -ம் ஆண்டு: மாதம் ₹20,000

  • 2 -ம் ஆண்டு: மாதம் ₹21,500

  • 3 -ம் ஆண்டு: மாதம் ₹23,000

  • … இப்படி ஆண்டுக்கு ₹1,500 வீதம் அதிகரித்தல்.

உங்கள் வருமானம் வருடா வருடம் உயர்வதைப் போல, உங்கள் முதலீட்டையும் உயர்த்துவதால், கூட்டு வளர்ச்சியின் பலன் மிக வேகமாக செயல்படத் தொடங்குகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி

₹1 கோடி+ எப்படி உருவாகிறது?

  • ஆரம்ப எஸ்.ஐ.பி: ₹20,000 / மாதம்

  • ஆண்டுக்கு டாப் அப் எஸ்.ஐ.பி: ₹1,500

  • காலம்: 12 ஆண்டுகள்

  • எதிர்பார்க்கும் வருமானம்: ஆண்டுக்கு சராசரியாக 12%

  • முதலீடு ஒவ்வொரு மாதமும் செய்யப்படுகிறது

டாப் அப் எஸ்.ஐ.பி – விளக்க அட்டவணை

டாப் அப் எஸ்.ஐ.பி

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

சாதாரண எஸ்.ஐ.பி vs டாப் அப் எஸ்.ஐ.பி (ஒப்பீடு)

முக்கிய குறிப்புகள்

  • வருமானம் உத்தரவாதம் அல்ல: 

  • ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் என்பது எதிர்பார்ப்பு மட்டுமே. பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து வருமானம் கூடலாம் அல்லது சிறிது குறையலாம்.

  • நீண்ட கால நோக்கம் அவசியம்:

  • எஸ்.ஐ.பிமற்றும் டாப் அப் எஸ்.ஐ.பி இரண்டுமே நீண்ட கால முதலீட்டில் தான் சிறந்த பலன் தரும்.

  • ஒழுங்கு தான் வெற்றி: 
    எஸ்.ஐ.பி. முதலீட்டை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே முக்கியம்.

நிறைவாக,மாதம் ₹20,000 என்ற தொகை பெரியதாகத் தோன்றலாம். ஆனால், ஆண்டுக்கு ₹1,500 என்ற சிறிய உயர்வு மூலம், 12 ஆண்டுகளில் ₹1 கோடி தொகையை உருவாக்குவது சாத்தியமாகிறது.

டாப் அப் எஸ்.ஐ.பி என்பது, அதிக சம்பளம் வரும் போது, அதிக செல்வம் உருவாக்கத் தொடங்க ஒரு புத்திசாலித்தனமான வழிமுறை ஆகும்.

நீண்ட கால முதலீட்டில் தீமெட்டிக் மற்றும் செக்டார் மியூச்சுவல் ஃபண்டுகள் – சரியான தேர்வா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்வோர் பெரும்பாலும் லார்ஜ் கேப், ஃப்ளெக்ஸி கேப், மல்டி கேப் போன்ற பரவலான அதிக ரிஸ்க் இல்லாத பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள். அதே நேரத்தில்,... மேலும் பார்க்க

வேலை போனாலும் வருமானம்! ₹50 லட்சம் SWP முதலீட்டில் மாதம் ₹25,000 சம்பளம் - எப்படி?

வெளிநாடு வாழ் தமிழர்களே! வருடக்கணக்கா பாலைவனத்துலயும், பனிப் பிரதேசத்துலயும் குடும்பத்தைப் பிரிஞ்சு கஷ்டப்பட்டு உழைச்சிருப்பீங்க. இப்போ, "போதும்டா சாமி... ஊருக்குப் போய் நிம்மதியா செட்டில் ஆகலாம்"னு ம... மேலும் பார்க்க

₹1 கோடி + மாதம் தொடர் வருமானம்: 35–50 வயசுக்காரங்க கலந்துக்க வேண்டிய கட்டணமில்லா SIP–SWP வகுப்பு!

திருச்சி நண்பர்களே, ஒரு நிமிஷம் நில்லுங்க! மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை சாட்சியா வெச்சு ஒரு உண்மையைச் சொல்றேன்... நம்ம ஊர்ல உழைப்புக்குக் குறைச்சலே இல்ல. தில்லை நகர்ல கிளினிக் வெச்சிருக்கிற டாக்டரா ... மேலும் பார்க்க

NRI-களே... ரியல் எஸ்டேட் போதுமென்று நினைத்து, இனியும் இதை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் இப்போது துபாயிலோ, சிங்கப்பூரிலோ, அல்லது அமெரிக்காவிலோ இருக்கலாம். குளிர்சாதன அறையில் அமர்ந்து இதை வாசித்துக்கொண்டிருக்கலாம். சம்பளம் சிறப்பாக இருக்கும். ஆனால், இரவில் தூங்கப் போகும்போது மட்டும... மேலும் பார்க்க

முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன?

தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். "1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,3... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு - உடனே கவனியுங்க!

கடந்த ஆண்டு சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டு உலோகங்களுமே எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டன.இந்த ஆண்டு அந்த இரண்டு உலோகங்களுடன் இன்னும் இரண்டு உலோகங்களுக்கு மவுசு உள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ... மேலும் பார்க்க