செய்திகள் :

Doctor Vikatan: கணவருக்கு நீரிழிவு... பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா?

post image

Doctor Vikatan:  என்  கணவருக்கு கடந்த 4 வருடங்களாக  சர்க்கரைநோய் இருக்கிறது.  இந்நிலையில் நான்  கர்ப்பமாக இருக்கிறேன். நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்று சொல்கிறார்களே... அது உண்மையா.... அதனால்  குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளைவிட மிக மிக ஆபத்தானது நீரிழிவு நோய். உலகம் முழுவதும் இன்று நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான, மோசமான நோய்களில் ஒன்று நீரிழிவு.

நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன.  விந்தணுக்களின் அடர்த்தி குறைவது, அவற்றிலுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவது, அவற்றின் நகரும் தன்மை பாதிக்கப்படுவது என பல பிரச்னைகளுக்கும் காரணம் நீரிழிவு நோய். 

நீரிழிவு நோய் பாதிப்பால்தான் பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணுக் குறைபாடுகள் வருகின்றன.

20-25 வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து, அதுவும் கட்டுப்பாடற்று இருந்து, அதற்காக வருடக் கணக்கில் மருந்துகள் எடுத்துக்கொள்வோரில் மிக மிக அரிதாக ஒன்றிரண்டு பேருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வரலாமே தவிர எல்லோருக்கும் வராது. இதைத்தான் உங்கள் மனைவி குறிப்பிட்ட லேட்டஸ்ட் ஆய்வும் குறிப்பிடுகிறது.

எனவே, நீரிழிவு நோய்தான் பிரச்னைக்குரியதே தவிர்த்து அதற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புகளைத் தராது. உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தையே பிறக்கும். கவலை வேண்டாம். உங்கள் கணவர் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மட்டும் உறுதி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?

Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றைதினமும் மூன்று வேளை சம... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்... இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா.... ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா?

Doctor Vikatan:உப்பை அறவே தவிர்க்கும் உணவுப்பழக்கத்தை இன்று பலர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படி அறவே உப்பைத் தவிர்ப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே போல சர்க்கரையை அறவே தவிர்க்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும... மேலும் பார்க்க

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைக... மேலும் பார்க்க