செய்திகள் :

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

post image

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம்  `வீரயுக நாயகன் வேள்பாரி'. மக்களின் மனதைக் கவர்ந்த இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனைப் படைத்திருந்தது.

ஒரு லட்சம் பிரதிகளைத்  தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. மேலும் விகடன் பிரசுரத்தில் வெளியான இந்தப் புத்தகம் அமேசான் தளத்தின் சிறந்த புத்தக விற்பனை வரிசையிலும், குறிப்பாக  Action & Adventure பிரிவில் 3 இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்து பெருமை சேர்த்தது.

வேள்பாரி
வேள்பாரி

இந்த நிலையில், வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுத்தாளர் பாபுராஜ் களம்பூர் மலையாளத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். அந்த நூலின் வெளியீட்டுவிழா கோலிக்கோட்டில் நடைபெற்றது.

இது தொடர்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``வீரயுக நாயகன் வேள்பாரியின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் இன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் வெளியிட திரு ஏ.ஜெ.தாமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இனி கேரள வாசகர்களிடம் பறம்பின் குரல் ஒலிக்கும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

சென்னை புத்தகக் காட்சி நிறைவு; இவ்வாண்டு அதிகம் விற்பனையான முதல் 5 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 49 வது சென்னை புத்தகக் காட்சி 8 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே நூல் வெளியீடுகளும், இலக்கிய அமர்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் ... மேலும் பார்க்க

வேங்கைநேரி: `அந்தப் புத்தகம் எனக்குள் கடத்திய வலி...' - இளம் எழுத்தாளர் நிகேஷ்

49-வது சென்னை புத்தகக் காட்சி ஒரு வாரத்தைக் கடந்து தற்போது நிறைவடைந்துள்ளது. வாசகர்களின் நிறைவு கட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வேங்கைநேரி நாவல் வ... மேலும் பார்க்க

Chennai Book Fair : கருநாக்கு, முள்ளிப்புல்... மிஸ் பண்ணக் கூடாத 5 கவிதைத் தொகுப்புகள்!

கருநாக்கு கருநாக்கு - முத்துராச குமார்முத்துராச குமாரின் படைப்பு நிலத்தையும் தொன்மங்களையும் மையமிட்டு எழுந்தாலும், எந்த இடத்திலும் நிலப்பெருமிதம் கொள்ளாமல், நிலத்தின் மீதிருக்கும் முரண்பாடுகளையும், சா... மேலும் பார்க்க

`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்

49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி ... மேலும் பார்க்க

``எழுத்துக்கள், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்" - எழுத்தாளர் புனித ஜோதி

49 ஆவது சென்னை புத்தகக் காட்சி வாசகர்களின் அமோக வரவேற்புடன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக புத்தக வெளியீடுகளும், புத்தக விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசி... மேலும் பார்க்க