செய்திகள் :

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

post image

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.

அறிவாலயம்
அறிவாலயம்

கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமுக, இந்த முறை 4 சீட்டுகளுக்கு ஓகே சொல்லி, 'கூட்டணியில் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும்' என லாஜிக் பேசியிருக்கிறது. திமுகவின் கிடுக்குப்பிடியில் 'விட்டுக்கொடுப்பது திமுகவுக்காகவா அல்லது தேமுதிகவுக்காகவா?' என்கிற குழப்பத்தில் எரிச்சலடைந்திருக்கின்றனர் கம்யூ.,க்கள் மற்றும் விசிகவினர்.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. இதுவரை ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ், மதிமுகவுடன் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு வந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. அவர்கள் முதல்வரை சந்தித்தும் தங்களின் எதிர்பார்ப்பை கூறிவிட்டனர்.

வைகோ
வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 முறை பேச்சுவார்த்தக்கு வந்திருந்தனர். 'திமுகவின் எண்ணிக்கை குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது!' என சண்முகமே ஓபனாக பேசிவிட்டுச் சென்றார். திருமாவளவன் ஒரே ஒரு முறை மட்டுமே அறிவாலயம் பக்கம் வந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் வரவில்லை.

கடந்த முறை மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு பாரபட்சம் இல்லாமல், தலா 6 சீட்டுகளை அறிவாலயம் ஒதுக்கியது. இந்த முறையும் அதே ஸ்டைலில் பாரபட்சம் இல்லாமல் தலா 4 சீட்டுகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதில்தான் அத்தனை கூட்டணி கட்சியினரும் அப்செட் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

'திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் தேமுதிகவை இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஏனெனில், தேமுதிக கூட்டணியை உறுதி செய்த சமயத்திலேயே அவர்களுக்கான நம்பரையும் திமுக இறுதி செய்துவிட்டது என்கிறார்கள்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

9-12 இடங்களை தேமுதிக எதிர்பார்த்தது. அதற்கு அறிவாலயம் க்ரீன் சிக்னல் காட்டியது. ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் தேமுதிக பக்கபலமாக இருக்கும் என திமுக நம்பியது. ஆனால், இப்போது காங்கிரஸூம் 3 தொகுதிகளை அதிகமாக வாங்கிவிட்டு கூட்டணியில் நீடிக்கிறது. அதனால்தான் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் நாம் யாருக்காக சீட்டுகளை விட்டுக் கொடுத்து தியாகம் செய்யப்போகிறோம் எனும் குழப்பம் எழுந்திருக்கிறது.

கூட்டணியை தக்கவைக்க திமுகவுக்கு வலுசேர்க்க அவர்களுக்காக வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம், கொள்கைப் பிடிப்பே இல்லாத கால் போன போக்கில் போகும் தேமுதிகவுக்காக எதற்கு நாம் சீட்டுகளை தியாகம் செய்ய வேண்டும் என்கிற கேள்வி கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கே அழைக்காமல், இறுதியில் அவர்களை அழைக்கும் முடிவில் அறிவாலயம் இருப்பது இவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. 'கூட்டணிக்காக விட்டுக்கொடுங்க' என இவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு தேமுதிகவுக்கு அள்ளி கொடுத்தால் என்ன செய்வது என்கிற குழப்பமும் சங்கடமும் விசிகவுக்கும் கம்யூக்களுக்கும் இருக்கிறது' என்கின்றனர் விவரப்புள்ளிகள்.

கூட்டணி கட்சியினரின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு திமுக தரப்பில் தேமுதிகவிடம் பேசியதை விட சீட்டுகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.!

'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

ஈரான், சீனா - இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள். எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹா... மேலும் பார்க்க

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்ட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `சிலிண்டர்கள் இல்லை’- கைவிரிக்கும் ஏஜென்சிகள்.. அச்சத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?

`எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை செய்தது...’மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெற... மேலும் பார்க்க

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? கையிருப்பு இருக்கிறதா? - தமிழக பெட்ரோலிய வணிக சங்கத் தலைவர் விளக்கம்

ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்ட... மேலும் பார்க்க

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ... மேலும் பார்க்க