செய்திகள் :

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? கையிருப்பு இருக்கிறதா? - தமிழக பெட்ரோலிய வணிக சங்கத் தலைவர் விளக்கம்

post image

ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது.

சிலிண்டர்
சிலிண்டர்

வணிக சிலிண்டர் தட்டுபாடு

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அலைமோதும் கூட்டம்

இதனிடையே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவிய நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதி இருக்கிறது.

வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், குடங்கள், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளி
பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளி

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

உண்மையிலேயே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இருக்கிறதா? என்று தெரிந்துகொள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளியிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடே இல்லை.

மொத்தம் 7000 பெட்ரோல் பங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இப்போது வரைக்கும் நாங்கள் கேட்கும் பெட்ரோல், டீசலை ஆயில் கம்பெனிகள் அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

கையிருப்புகள் இருக்கின்றன

அவர்கள் குறைவாக எங்களுக்கு அனுப்புவது இல்லை. பொதுவாக பெட்ரோல் விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்களை கையிருப்பு வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் பார்த்தால் எங்களிடம் பெட்ரோல், டீசல் கையிருப்புகள் இருக்கின்றன.

எவ்வளவு கேட்டாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை தருகின்றன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.

பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகள்

அச்சப்பட வேண்டாம்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்று வதந்திகளைப் பரப்புகிறார்கள். LPG தட்டுப்பாடு வந்ததால் மக்கள் அச்சத்தில் அளவுக்கு அதிகமான பெட்ரோல், டீசலை வாங்குகின்றனர்.

ஆனால் அளவுக்கு அதிகமாக வாங்கினால் பெட்ரோல், டீசல் விரைவில் காலியாகி செயற்கை தட்டுபாடு ஏற்படும். கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டாம். அது சட்டப்படி தவறு.

தேவைக்கு ஏற்றமாதிரி மட்டும் பெட்ரோல், டீசல் வாங்கினால் போதுமானது. பெட்ரோல் தட்டுபாடு வந்துவிட்டது என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அப்படி ஒரு சூழல் தற்போது இல்லை" என்று நிலவரத்தை நம்மிடம் விவரித்தார்.

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்ட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `சிலிண்டர்கள் இல்லை’- கைவிரிக்கும் ஏஜென்சிகள்.. அச்சத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?

`எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை செய்தது...’மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெற... மேலும் பார்க்க

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! - யார் இவர்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து கேரள ஆளு... மேலும் பார்க்க