செய்திகள் :

நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

post image

'ஈரானுக்குள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டு போட்டுட்டாங்களாம்' என்று நாம் பேசிக்கொண்டிருந்த 'எங்கோ' நடக்கும் போரின் தாக்கம் இப்போது நமது வீடுகளில் வந்து நிற்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) வழக்கம் போலானதாக இல்லை. ஆம்... அன்று தான் வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்கு பல கட்டுப்பாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டன.

சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை தீரும் வரை, வணிக சிலிண்டர் விநியோகம் கிடையாது... 25 நாள்களுக்கு முன் சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை... சிலிண்டரைப் பதுக்கக் கூடாது... இப்படிப் பல நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டது.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு
சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

இதையொட்டிப் பல விஷயங்கள் 'கடகட'வென நடந்தேறின...

ஹோட்டல்களில் உணவு பட்டியல்கள் குறைக்கப்பட்டன,

சில ஹோட்டல்களை மூடியே சென்று விட்டனர்,

ஹாஸ்டல்களில் டீ, காபி, தோசை, சப்பாத்தி, இட்லி ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

நமது வீடுகளில் வரிசையாக சிலிண்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இதனால், கேஸ் சிலிண்டர் புக்கிங் ஹெல்ப் லைனே ரீச் ஆகாமல் போனது...

இப்படி ஏகப்பட்ட பயம், பதற்றம் நம்மிடையே இருந்தது... இன்னமும் இருந்து வருகிறது.

ஆனால், இவ்வளவு பயப்பட வேண்டுமா என்று கேட்டால், அதற்குப் பதில் 'நோ'.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்துப் பயப்பட வேண்டாம். கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருந்தால் போதும்.

என்ன பிரச்னை?

இந்தியாவில் போதுமான அளவு கேஸ் சிலிண்டர் இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை தான். உலக அளவில் எரிசக்திகளை இறக்குமதி செய்யும் டாப் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா இறக்குமதி செய்யும் 90 சதவிகித எல்.பி.ஜி ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் இந்தியாவை வந்து சேர்கிறது. இப்போது அந்த வழியைத் தான் ஈரான் மூடி வைத்துள்ளது. அதனால், நமக்கு இப்படியொரு தட்டுப்பாடு.

இந்தப் பிரச்னை நமக்கு மட்டுமல்ல... வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளும் எல்.பி.ஜி தட்டுப்பாட்டால் தள்ளாடி வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

எப்போது சரியாகும்?

ஈரான் போர் முடிந்ததும்... ஹார்மோஸ் ஜலசந்தியைத் திறந்ததும் உடனே இந்தப் பிரச்னை சரியாகி விடாது என்கிற நிதர்சனத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக, கத்தார், சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகள் அவர்களது நாட்டில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் எல்.பி.ஜி உற்பத்திகளைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

இந்த நாடுகள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும்போது தான், வழக்கமான... இடையூறு இல்லாத சப்ளைகள் தொடங்கும்.

இப்போதைக்குக் கேஸ் சிலிண்டர் பிரச்னை மட்டும் எட்டிப்பார்த்துள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்ரோல், டீசல் பிரச்னை தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஹர்மோஸ் ஜலசந்தியை இந்திய கப்பல்களுக்கு திறக்க, ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவிர தமிழ்நாட்டில் 21 நாள்களுக்கு தேவையான பெற்றோல் டீசல் கையிருப்பு இருப்பதாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தட்டுப்பாடுகளுக்கு காரணம், மக்கள் அச்சத்தில் வாங்கி குவிப்பது மட்டுமே.

பெட்ரோல்
பெட்ரோல்

சமையலை 'இப்படி' செய்யுங்க!

சமையலுக்கு இன்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்தலாம் என்று நினைப்பவர்கள், இது 'வெயில்' காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏற்கெனவே வெயில் காலத்தில் நம்மூர்களில் 'கரண்ட் கட்' அடிக்கடி நடக்கும். இதில் ஏசி வேறு பயன்படுத்துவோம். ஏ.சி, இன்டக்‌ஷன் ஸ்டவ் பயன்பாடு என அனைத்தும் கரண்ட் கட்டை இன்னும் அதிகமாக்கும்.

ஆக, இத்தகைய சூழலை சமாளிக்க இப்போதே சில முன்னெரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் பார்ப்போம்.

கேஸ் சிலிண்டர் பிரச்னையை எதிர்கொள்ள ஏழு வகை பொறியல், அறுசுவை உணவு என்றில்லாமல், அளவாக தேவையானதை மட்டும் சமைத்து சாப்பிடுவோம்.

இன்டக்‌ஷன் ஸ்டவ் இருக்கிறது என்று இஷ்டத்திற்கு சமைக்காமல், தேவையானதை மட்டும் சமைத்து சாப்பிடுவது நல்லது.

'வெரைட்டியாக தான் சாப்பிடுவேன்' என்பவர்கள் விதவிதமான பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இது ஆரோக்கிய மற்றும் உணவு கான்சியஸ்னஸையும் ஏற்படுத்தும்.

பழங்கள்
பழங்கள்

பெட்ரோல், டீசல் பிரச்னையைக் குறைக்க...

பெட்ரோல், டீசல் பிரச்னையை எடுத்துக்கொண்டால், ஒருவருக்கு கார், பக்கத்தில் செல்வதற்கே பைக் என்று இருக்காமல், தூரப் பயணத்திற்கு பொதுப் போக்குவரத்துகளையும், மிக அருகில் செல்லும் இடங்களுக்கும் நடந்து செல்லலாம்.

அடுத்ததாக, விலைவாசி எகிறப்போகிறது என்று அனைத்தையும் வாங்கி ஸ்டாக் செய்யாதீர்கள். இந்தப் போர் எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அதனால், தேவையானதை மட்டும் வாங்கி வையுங்கள்.

அப்படியே ஏதாவது பொருள்களின் விலை மிகவும் அதிகமானாலும், அந்தப் பொருளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். முடியாத பட்சத்தில், அதன் பயன்பாட்டைக் குறையுங்கள்.

ஹோட்டல்களில் உணவு வகைகளைக் குறைக்கிறார்கள்... மூடுகிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது தான். அதனால், சம்மர் ஹாலிடே டிரிப்களை இப்போதைக்கு பிளான் செய்யாமல் இருப்பது நல்லது.

முன்னரே புக் செய்திருந்தாலும், நீங்க செல்ல இருக்கும் இடத்தில் நிலவும் சூழலைப் பொறுத்து முடிவு எடுங்கள். இந்த விஷயத்தில் உங்களைப் பற்றி யோசிப்பதை விட, உங்கள் குழந்தைகளுக்கு உணவு, போக்குவரத்து ஆகியவற்றை சிந்தியுங்கள்.

பெட்ரோல், டீசல் பிரச்னையானால், பலரும் பொது போக்குவரத்து பக்கம் வருவார்கள். அதனால், அங்கே கூட்ட நெரிசல் அதிகரிக்கும்.

 வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள்!

இதை தவிர்க்க, அலுவலகங்களில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' கேட்டுப்பாருங்கள். 'முடியாது' என்று கூறினால், ஹைபிரிட் வொர்க் ஸ்டைலைக் கேட்டுப்பாருங்கள்.

தமிழ்நாட்டில் அடுத்து திருமண சீசன் இல்லை தான். ஆனால், வேறு ஏதாவது நிகழ்வு, விசேஷம் வைத்திருந்தால், அதை தள்ளிப்போட முடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், அழைக்கும் ஆள்களைக் குறையுங்கள்.

இந்த நேரத்தில் கொஞ்சம் அதிகமாக பணத்தை சேமித்து வைக்க பாருங்கள். விலைவாசி உயர்ந்தால், உங்களுக்கு இப்போது ஆகும் செலவுத் தொகையை தாண்டி, அதிகம் ஆகும். அதை சமாளிக்க இப்போதே தயாராகுங்கள்.

'பயப்படாதீங்க... பயப்படாதீங்க' என்று சொல்லிவிட்டு, இவ்வளவு சொல்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா? கொரோனா முதல் லாக்டவுனின் போது, சூப்பர் சமையல், நல்ல பொழுதுபோக்கு என்று நிலைமையை நன்றாகவே சமாளித்தோம்.

ஆனால், இரண்டாவது லாக்டவுனின் போது, பலருக்கும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து தடுமாறினார்கள். அதை தவிர்க்கவே, இந்த முன்னெச்சரிக்கை டிப்ஸ்.

இத்துடன் உங்களுக்கு வேறு ஏதேனும் டிப்ஸ் தெரிந்தாலும்... இருந்தாலும், கமென்ட் செய்யுங்க... அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்போம்.

ஆட்டோவுக்கு பயன்படுத்தும் LPGயை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பலாமா? பிரச்னை இல்லையா? | Explains

நேற்று தமிழ்நாட்டில் பல ஃபில்லிங் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த வரிசை பெட்ரோல், டீசலுக்காக இல்லை. வீட்டு உபயோகச் சிலிண்டர் விநியோகக் கட்டுப்பாடுகளால் 'முன்னெச்சரிக்கை'... மேலும் பார்க்க

நம்பிக்கை விருதுகள் 2025: "நெகட்டிவா ஒரு பயங்கர வில்லனா..." - மனம் திறந்த காளி வெங்கட்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருது 2025’-ல் `யதார்த்த திரைக்கலைஞன் விருது’ பெற்ற நடிகர் காளி வெங்கட், விழா மேடையில் தொகுப்பாளர்களுடன் உரையாடியது கலகலப்பாக இருந்தது.விருது வழங்கிய விகடன் குழுமத்துக்கு நன்ற... மேலும் பார்க்க

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் - 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்க... மேலும் பார்க்க

`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்' - இயக்குநர் ராம்

பெருந்தமிழர் விருதை 'எஸ்.வி.ராஜதுரை'க்கு விருது வழங்கியவர்களில் இயக்குநர் ராமும் ஒருவர். விருது வழங்கியதற்குப் பின், இயக்குநர் ராம் பேசுகையில், "எஸ்.வி.ஆர் சார் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய டீச்ச... மேலும் பார்க்க

`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' - சீமான்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025' விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம். அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, 'கலகல'த... மேலும் பார்க்க

`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' - திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு 'பெருந்தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மேடையில் திருமாவ... மேலும் பார்க்க