செய்திகள் :

`உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது' - பெண் பல் மருத்துவரின் விபரீத முடிவு

post image

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அவரது பெற்றோர் ஒரு உணவகத்தில் சாப்பிட சென்றனர். அப்போது சோனாவானே வீட்டில் தனியாக இருந்தார். அவர் அவர்கள் சென்றவுடன் தனது அறைக்குள் சென்றார். அவரது பெற்றோர் ஏதாவது உணவு வாங்கி வரவேண்டுமா என்று கேட்டனர். ஆனால் தனக்கு எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்.

இரவில் சாப்பிட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பி வந்தபோது, ​​தங்கள் மகளின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர் படித்துக்கொண்டிருப்பதாக நினைத்து, அவரை தொந்தரவு செய்யவில்லை.

இருப்பினும், மறுநாள் காலை 10 மணி வரை அவரது அறைக்கதவைத் திறக்காததால், பெற்றோர் கவலையடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ​​சோனாவானே தனது தாவணியில் தூக்கிப்போட்டு இருந்தார். அவரை உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்திருந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சோனாவானே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆறு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், தானும் பைசுலும் ஓராண்டிற்கும் மேலாக ஒன்றாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பல மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர் தன்னைத் தொடர்ந்து அவமதித்ததாகவும் இழிவுபடுத்தியதாகவும் சோனாவானே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர், "உன்னுடைய வார்த்தைகள் மிகவும் சக்திவாய்ந்தவை, என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவை மட்டுமே போதுமானதாக இருந்தன. நான் உணர்ச்சியற்றவளாக உணர்கிறேன். என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. நீ மகிழ்ச்சியாக இருப்பாய் என்றும், உன்னுடைய ஆணாதிக்கம் திருப்தியடைந்திருக்கும் என்றும் நம்புகிறேன். நான் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்," என்று எழுதியுள்ளார். அக்கடிதத்தின் அடிப்படையில் அப்பெண்ணின் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை தடுப்பு மையம்

விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு... மேலும் பார்க்க

'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நில... மேலும் பார்க்க

ஜம்முவில் பயங்கரம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி! - பதறவைக்கும் காட்சி!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா (88), மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்முவின் கிரேட்டர் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி; காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு- கிராம மக்கள் மறியல்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் ... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசி... மேலும் பார்க்க

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' - வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மா... மேலும் பார்க்க