செய்திகள் :

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

post image

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பிப்ரவரி 28 முதல் ஆறு Gulf Cooperation Council (ஜிசிசி) நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் வரலாற்றில் முதன் முறையாக முழு வளைகுடா பிராந்தியத்தையும் நேரடியாக குறிவைப்பது இதுவே முதல் முறை.

இந்தியா - இஸ்ரேல் உறவு

இந்த தாக்குதலின்போது விமான நிலையங்கள், அமெரிக்காவின் இராணுவ தளங்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், துறைமுகங்கள் என அமெரிக்காவுக்கு உதவிகள் செல்லும் அனைத்துத் வாய்ப்புகளையும் குறிவைத்தது. இந்த தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 122 பேர் காயமடைந்தனர். குவைத்தில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அலி அல் சேலம், கேம்ப் புஹ்ரிங் தளங்கள், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். மூன்று F-15 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தில், ``ஈரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி அச்சுறுத்தல்களைக் கைவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

தற்போது அமெரிக்காவின் தலைமையில் உள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பூட்டான், கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், நியூசிலாந்து, நோர்வே, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஏமன், சாம்பியா இந்தியா உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. அதே நேரத்தில் ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! - யார் இவர்?

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச்.12) பதவியேற்றிருக்கிறார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். இதையடுத்து கேரள ஆளு... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 'பாதுகாப்பு எங்கே? இப்படி ஒரு ஆட்சி தேவையா?'- விஜய் காட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் , படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு எதிராக க... மேலும் பார்க்க

ஸ்டாலின்: கழுத்தை நெறித்த கூட்டணிக் கட்சிகள்; புகைச்சலில் நிர்வாகிகள்! - தி.மு.க போடும் ஸ்கெட்ச்!

தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! - காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனால், கடற்கரை சாலையில் கலாசா... மேலும் பார்க்க

`டேமேஜை சரிக்கட்டும் அன்பில்? டு வாய்திறக்காத சிட்டிங் MLA-க்கள்; கொதிக்கும் சிறுத்தைகள்' | கழுகார்

கொதிக்கும் சிறுத்தைகள்வாய்திறக்காத சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள்!தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் வி.சி.க - தி.மு.க இடையே நாளுக்கு நாள் கசப்பு மேலோங்கி வருகிறது. வி.சி.க மாணவரணி மாநில நிர்வாகி நெப்போலியன்... மேலும் பார்க்க

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்ற... மேலும் பார்க்க