செய்திகள் :

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

post image

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்
போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்

இந்நிலையில் நேற்று சென்னை பூங்கா ரயில்நிலையத்திலும் இன்று நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை ரயில் நிலையங்களிலும் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து மே17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டிற்கும் பதிவில், " இன்று பிற்பகல் சென்னையில் உள்ள குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ஆதிக்க இந்தி எழுத்துகளை மே17 இயக்கத் தோழர்கள் அழித்தார்கள்.

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழி கல்வியை திணித்து, ஒன்றிய அரசின் பணிகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் இந்தியை முதன்மைப் படுத்துவதை கண்டித்து போராட்டத்தை கடந்த பிப் 2ம் தேதி உலகத்தாய்மொழி நாளில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது மே17 இயக்கம்.

ஒன்றிய வேலைகளில் இந்தி-ஆங்கிலத்தில் தேர்வு நடத்துவதால் இந்தி பேசாத மாநில இளைஞர்கள் தங்கள் சொந்த தாய்மொழியில் தேர்வு எழுத இயலாமல் போகிறது.

இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமது தாய்மொழியில் எழுதி வெற்றி பெறுகிறார்கள். இதனால் ரயில்வே, வங்கிகள், வரி அலுவலகங்கள், என்.எல்.சி போன்ற நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். இந்நிலைக்கு காரணம் இந்தி மொழி திணிக்கப்படுவதுதான். ஆகவே இந்தி மொழி அழிப்பு போராட்டத்தை மே17 இயக்கம் அறிவித்து முன்னகர்த்துகிறது. தொடர் இந்தி அழிப்பை நடத்துகிறது.

 திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

இதன் தொடர்ச்சியாக 1938ம் ஆண்டு மொழிபோர் ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11ம் தேதியன்று சென்னை பூங்கா ரயில்நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டத்தை தொடங்கியது.

போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று சென்னை ரயில்வேயின் குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி பெயர் எழுத்துகள் மே17 இயக்கத் தோழர்களால் அழிக்கப்பட்டன" என்று பதிவிட்டிருக்கிறார்.

'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சில... மேலும் பார்க்க

`எங்க ஆளுங்கதான், ஆனா திமுக MLA' - ஒற்றை சீட் எனும் முட்டுச் சந்தில் மதிமுக! - காரணம் யார்?

நேற்று மாலை முதல் சமூக ஊடகங்கள் முழுக்க கட்சியில் மிச்சமிருக்கிற மதிமுக தொண்டர்களின் வலிகள் நிறைந்த பதிவுகளைப் பார்க்க முடிகிறது.மதிமுகவிலிருந்து வெளியேறிவிட்ட மல்லை சத்யா கூட, "புரண்டு புரண்டு படுத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்க... மேலும் பார்க்க

'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

ஈரான், சீனா - இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள். எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹா... மேலும் பார்க்க

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.அறிவாலயம்கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமு... மேலும் பார்க்க

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க