செய்திகள் :

Doctor Vikatan: உப்பைத் தவிர்ப்பதுபோல உணவில் சர்க்கரையை அறவே தவிர்ப்பது சரியானதா?

post image

Doctor Vikatan: உப்பை அறவே தவிர்க்கும் உணவுப்பழக்கத்தை இன்று பலர் பின்பற்றுகிறார்கள். ஆனால், அப்படி அறவே உப்பைத் தவிர்ப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதே போல சர்க்கரையை அறவே தவிர்க்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதா.... சர்க்கரையைத் தவிர்த்த ஒரே வாரத்தில் சருமம் முதல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆரோக்கியமான நபர், சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

அம்பிகா சேகர்

உணவில் உப்பை முழுமையாகத் தவிர்க்க முடியாது, தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், அது உடலில் எலக்ட்ரோலைட் சமமின்மையை (Electrolyte imbalance) உண்டாக்கிவிடும். நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் மிக முக்கியமான காரணிகளாக உள்ளன.

உடலில் சமநிலை குறையும்போது முதலில் தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படும்; கை, கால்கள் மரத்துப்போனது போன்ற உணர்வு உண்டாகும்.
சோடியம் அளவு குறையும்போது உடல் மிகவும் சோர்வடைந்து, சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போகும். எலக்ட்ரோலைட் அளவு மிக அதிகமாகக் குறைந்தால், படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5 கிராம் முதல் அதிகபட்சம் 7-8 கிராம் வரை உப்பு அவசியம். ஆனால், உப்பை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது; அது உடலில் தேவையற்ற நீர் தங்க வழிவகுக்கும்.

'காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்' நிறைந்த வெல்லம், பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

இனிப்பைப் பொறுத்தவரை, வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில், அது 'சிம்பிள் கார்போஹைட்ரேட்' வகையைச் சார்ந்தது. அதற்கு பதிலாக 'காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்' நிறைந்த வெல்லம், பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரையைத் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கானவை.

வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது நீரிழிவு நோய் (Diabetes), புற்றுநோய் (Cancer), சரும நோய்கள் மற்றும் உடல் எடை குறைப்பிற்கு (Weight loss) மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் சர்க்கரையைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதுதான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும... மேலும் பார்க்க

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைக... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில்படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்... மேலும் பார்க்க

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந... மேலும் பார்க்க