`அமெரிக்காவின் ஒரு மெயில்' அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 ...
"ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன்" - 'மீண்டும்' ஈரான் குறித்து ட்ரம்ப்
பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது.
இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப்.
ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப்.
இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…
“ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது.
அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா.
இப்போது என்ன நடக்க உள்ளதோ?
















