செய்திகள் :

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

post image

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்.

தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க.

ராமதாஸ்
ராமதாஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், "எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம்" என்றனர்.

''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா?" என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, "ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள்.

திருமாவளவன், ஸ்டாலின்

அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள்" என்றனர்.

முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடுNDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர்.ஆளுநரின் அராஜகம் எப்ப... மேலும் பார்க்க

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணை... மேலும் பார்க்க

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரு... மேலும் பார்க்க

"ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப்... மேலும் பார்க்க

ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4

தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க... மேலும் பார்க்க