திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்...
நேற்றைய டாப் ஈக்விட்டி ஃபண்ட், ஏன் நாளைய பாட்டம் ஃபண்ட் ஆக மாறுகிறது?
bbbbbbbbbbbbbbbbபங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் அடிக்கடி செய்யும் ஒரு மிகப் பெரிய தவறு – சமீப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஃபண்டுகளையே தேர்வு செய்வது ஆகும்.
இந்தப் பழக்கம் செயல்திறனைத் துரத்தும் முதலீடு என அழைக்கலாம்.
தரவுகள் என்ன சொல்கின்றன?
இந்த அணுகுமுறை நீண்ட காலத்தில் லாபம் தருவதில்லை; மாறாக இழப்புகளை அதிகரிக்கிறது.
இந்த விவரம் PGIM India – Behaviour Edge
“The Myth of Best Performing Fund” –ன் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது

செயல்திறனைத் துரத்துவது ஏன் தோல்வியடைகிறது?
செயல்திறன் தொடர்ந்து நீடிப்பதில்லை. இந்திய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தரவுகள் (நவம்பர் 2025 வரை)
ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகின்றன:
3 வருடங்களில் சிறந்த ஃபண்டுகளின் பட்டியலில் இருந்தவைகளில் பல அதற்கு அடுத்த ஆண்டுகளில் அந்தச் சிறந்த பட்டியலில் இருப்பதில்லை. விரிவான விவரத்துக்கு அட்டவணை 1-ஐ பார்க்கவும்.
அட்டவணை 1: டாப் ஈக்விட்டி ஃபண்டுகளின் தொடர் நிலை..!
காலகட்டம் (3 ஆண்டுகள் – சிறந்த 25%)
அடுத்த ஆண்டு சிறந்த 25%-ல் தொடர்ந்தவை
2014–2017 → 2018 12.5%
2015–2018 → 2019 8.3%
2018–2021 → 2022 11.1%
முக்கியக் குறிப்புகள்:
கடந்த ஒரு வருடத்தில் சிறந்த 25% ஃபண்ட்களில் இருந்த அனைத்தும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் மோசமான 25%-க்கு சரிந்துவிட்டன.
கடந்த 3 வருடங்களில் சிறந்த ஃபண்ட்கள்,
அடுத்த காலகட்டத்தில் மீண்டும் சிறந்த 25%-ல் இருப்பது
8%–12% நேரங்களில் மட்டுமே.
அதாவது, “இன்று சிறந்தது” என்பது “நாளையும் சிறந்தது” என்பதற்கான உத்தரவாதம் அல்ல.
சராசரிக்கு திரும்புதல்:
ஒரு துறை அல்லது முதலீட்டு பாணி தொடர்ந்து நல்ல வருமானம் கொடுத்தால், முதலீட்டாளர்கள் அதில் அதிகமாக பணம் போடத் தொடங்குகிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் இதே நேரத்தில், அந்த பாணியின் உச்சம் முடிந்துவிடுகிறது. அடுத்த கட்டத்தில் சரிவு தொடங்குகிறது. இதையே சராசரிக்கு திரும்புதல் என்கிறோம். முதலீட்டாளர்கள் உச்சத்தில் வாங்கி,
சரிவில் விற்கும் நிலை உருவாகிறது.
மிட்கேப் ஃபண்டுகள் – ஓர் உண்மை உதாரணத்தை பார்ப்போம்.
மிட்கேப் ஃபண்டுகளில் (2014–2025) சில ஃபண்டுகளின் தரவரிசை மாற்றங்களை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு ஒரு ஃபண்டும் நீண்ட காலம் தொடர்ந்து டாப் இடத்தில் இல்லை.
ஒரு ஃபண்ட் சில ஆண்டுகள் முதல் இடம், அடுத்த சில ஆண்டுகளில் 150 அல்லது 250-க்கு கீழே கூட போய்விடுகிறது.
சிறந்த ஃபண்டுகளை முதலீட்டாளர்கள் துரத்துவதால் இன்னொரு பெரிய ரிஸ்க் ஆக மாறும். அண்மைக் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஃபண்டுகளில் அதிக பணம் வந்து சேர்வது வழக்கம்.

உதாரணம்:
2024-ல் மிட்கேப் #1 ஃபண்ட், அந்தப் பிரிவின் மொத்த முதலீட்டில் 22%–53% வரை பெற்றது. ஆனால், நடப்பு 2025- ல் அதே ஃபண்ட் 259-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதாவது, மக்கள் அதிகமாக முதலீடு செய்த பிறகே,
அந்த ஃபண்டின் செயல்திறன் வீழ்ச்சி அடைந்தது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று குறைவான தொகையை சரியாக நிர்வகித்த ஃபண்ட் மேனேஜரால் அதிக தொகையை சரியாக நிர்வகிக்க முடியாமல் போனதாகும்.
ஏன் இப்படி சுழற்சி நடக்கிறது என்பதை அட்டவணை 2-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அட்டவணை 2: முதலீட்டு சுழற்சிகள்;
சந்தை நிலை முன்னிலைப் பெறும் பிரிவு
பாதுகாப்பு மனநிலை லார்ஜ்கேப் ஃபண்டுகள்
ரிஸ்க் மனநிலை மிட்கேப் / ஸ்மால்கேப் ஃபண்டுகள்
இதிலும் உலக பொருளாதாரம், வட்டி விகிதம், பணவீக்கம் மாறும்போது இந்த முன்னுரிமையும் மாறுகிறது.
முதலீட்டு பாணி மாற்றங்கள்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெவ்வேறு பாணிகளில் முதலீடு செய்கின்றன: இதை அட்டவணை 3-ல் தெரிந்து கொள்ள முடியும்.
அட்டவணை 3 – முக்கிய முதலீட்டுப் பாணிகளும் அவற்றின் அர்த்தமும்.
முதலீட்டுப் பாணி அர்த்தம்
மதிப்பு குறைந்த விலையில் உள்ள பங்குகள்
வளர்ச்சி அதிக வளர்ச்சி வாய்ப்பு
தரம் உயர்ந்த லாப விகிதம், குறைந்த கடன்
வேகம் சமீப கால வெற்றியாளர்கள்
உதாரணம்:
2024-ல் “வேகம்” மற்றும் “மதிப்பு” பாணிகள் முன்னிலை பெற்றன. அடுத்த ஆண்டு வேறு பாணி முன்னிலை பெறலாம்.
தீர்வு: பல்வகை முதலீடு
ஒரே ஃபண்ட், ஒரே பிரிவு, ஒரே பாணி – இதெல்லாம் அதிக ரிஸ்க் ஆகும்.
அதாவது லார்ஜ்கேப் ஃபண்ட் (நிலைத்தன்மை) மிட்கேப் ஃபண்ட் (வளர்ச்சி). ஸ்மால்கேப் ஃபண்ட் (அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம்) ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (பலபிரிவு மாற்றத்திற்கேற்ப முதலீடு) எனப் பிரித்து முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெற முடியும்.
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு..!
1. கடந்த 6 மாதம் அல்லது 1 ஆண்டு அல்லது 2 ஆண்டு அல்லது 3 ஆண்டுகளில் சிறந்தது என்ற காரணத்தால் ஃபண்ட் வாங்காதீர்கள்.
2. செயல்திறனைத் துரத்தும் முதலீடு பெரும்பாலும் உச்சத்தில் வாங்க வைக்கிறது.
3. பிரிவு + பாணி இரண்டிலும் பல்வகை அவசியம்.
4. எஸ்.ஐ.பி தவணை முதலீடு + நீண்டகால அணுகுமுறை தான் சிறந்த பாதுகாப்பு.
5. ஃபண்ட் தேர்வில் தொடர்ச்சி, ரிஸ்க் எடுக்கும் திறன், சொத்து ஒதுக்கீடு முக்கியம் ஆகும். டாப் ஃபண்ட் என்பது முக்கியம் அல்ல.
டாப் ஃபண்ட் என்பது ஒரு மாயை ஆகும். நீண்ட கால செல்வம் உருவாக்க, சமீபத்திய வெற்றியைத் துரத்தாமல்,சீரான, பல்வகைப்பட்ட முதலீட்டு அணுகுமுறை தான் உண்மையான வெற்றி.
















