`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலி...
”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடிகர் என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும், கூட்டங்களில் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் முதலமைச்சராகதான் வருவேன் என அவர் பேசுவது அவரது பேராசையை காட்டுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக் கொள்ளவில்லை?

அவரை சாதியை வட்டத்துக்குள் சுருக்கிப் பார்க்கிறார்கள். ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டவில்லை. அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துப் பேசினால் நன்றாக இருக்கும். விசிலை வாயில் வைத்து ஊதத்தான் முடியும். ஆனால், ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு வீரர் ஒருவர் வேண்டும். ஓடி வெற்றி பெற வேண்டும், அரசியல் அது தேர்தல் களத்தில்தான் தெரியும்.
பா.ஜ.கவின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் வலையில் விழுந்ததன் விளைவாக ஓ.பி.எஸ் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பா.ஜ.கட்சியை நம்பி தர்ம யுத்தத்தை நடத்தியவர் ஒ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி எப்படி சசிகலாவிற்கு துரோகம் செய்தாரோ , அதேபோல் ஓ.பி.எஸ்-யிடம் இருந்த பலரும் இ.பி.எஸிடம் சென்று விட்டார்கள். முழுக்க முழுக்க பாஜக ஓ.பி.எஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தை அறுத்திருக்கிறது.

ஒ.பி.எஸின் நிலைமை இன்றைக்கு மிகவும் கவலைக் குறியதாகவும், வருத்தம் அடையக் கூடியதாகவும் இருக்கிறது. முக்குலத்தோர் சமுதாயத்தை பா.ஜ.க பிளவுபடுத்தி, டி.டி.வி தினகரனை சிறையிலடைத்து, கூட்டணியில் இருந்து வெளிநடப்பு செய்த அவரை இன்று மீண்டும் கூட்டணில் சேர்க்கப்படுகிறது என்றால், முழுக்க முழுக்க பா.ஜ.கவின் மோசடி வேலை என உலகமே உற்று நோக்குகிறது.
10 நாட்களுக்கு முன் இ.பி.எஸ் பற்றியும், பா.ஜ.கவை பற்றியும் தினகரன் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை மக்கள் உடனடியாக மறக்க மாட்டார்கள். இ.பி.எஸ் மீது எவ்வளவோ குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வர விட மாட்டேன். எனக் கூறி வந்த டி.டி.வி தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லை என்று சந்தர்ப்பத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும், சூழ்நிலை கைதியாக பங்காளி சண்டை என கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

டி.டி.வி தினகரன் அன்று ஒன்று பேசுகிறார், இன்று ஒன்று பேசுகிறார், நாளை ஒன்று பேசுவார். பா.ஜ.கவின் அரசியல் தீர்மானமே அண்டைய மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பா.ஜ.கவின் தாமரை நாட்டுக்கு நாசம். வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது.” என்றார்.














