செய்திகள் :

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா" - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

post image

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது வாழ்க்கை, கலை, சினிமா, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களூக்கு இந்த விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், மறைந்த மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோல், மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன், கர்நாடக இசை வயலின் கலைஞர் என். ராஜம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ், பிரபல எழுத்தாளர் பி. நாராயணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பத்ம பூஷண் பட்டியலில் பாடகி அல்கா யாக்னிக், நடிகர் மம்மூட்டி, தொழிலதிபர் உதய் கோடக், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷ்யாரி, மறைந்த விளம்பரத் துறை நிபுணர் பியூஷ் பாண்டே, சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பத்மஸ்ரீ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா ஆகியோர் விளையாட்டுத் துறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கலைத் துறைப் பட்டியலில் நடிகர்கள் மாதவன், பிரோசென்ஜித் சாட்டர்ஜி, கர்நாடக இசைப் பாடகி திரிப்தி முகர்ஜி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைஞர்களான தருண் பட்டாச்சார்யா, போக்கிலா லெக்தேபி போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டு விருது பட்டியலில் 19 பெண்கள், 6 வெளிநாட்டினர், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், மறைந்தவர்கள் 16 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்ம விருதுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகின்றன.

மம்முட்டி
மம்முட்டி

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்முக்கா அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்’ நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.

நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனப் பதிவிட்டிருக்கிறார்.

"தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம்" - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது.கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இம்முறையும் அவர... மேலும் பார்க்க

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக... மேலும் பார்க்க

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்' ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிக... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3

சினிமாவில் உச்ச நடிகராக உயர்ந்த பிறகு அந்த நடிகர்கள் பலரின் கவனம் அரசியல் மீதும் பாயும். அப்படி தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலில் பெரும் தாக்கங்களையும் திருப்பங்களையும் கொண்டு... மேலும் பார்க்க

ஈரோடு: வனத்துக்குள் வழிதவறிய சிறுவர்கள்; களமிறங்கிய வனத்துறை; 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொங்காடை மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன் (6), ராசாத்தி (11) கலைவாணி (12), சிவா (11), சூர்யா (11), தமிழ்ச்செல்வன் (11) மற்றும் மணிகண்டன் (11).இந்த 7 பேரும் அ... மேலும் பார்க்க