``இப்படியெல்லாம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை... என் ஆசையெல்லாம்" - நடி...
'விவசாயி வீரமணி, ஓட்டுநர் சங்கர், டாப் காவல் நிலையம்.!' - குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன், கொடியேற்றினார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
கொடியேற்ற நிகழ்விற்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய விருதுகளின் பட்டியல்...
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்
> நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுநர் சங்கர்
> தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்
> கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்














கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது
> திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லா
சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது
> தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
> முதல் பரிசு மதுரை மாநகரம்
> இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்
> மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்
காந்தியடிகள் காவலர் பதக்கம்
> விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்
> விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்
> கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்
> கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்
> சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்














