TVK Vijay Full Speech| எனக்கு ஊழல் செய்யவேண்டிய அவசியமே இல்ல | தவெக Mahabalipura...
"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தக் கூட்டணி என்று தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன்,
"தேமுதிக யாருடன் கூட்டணி சேருவார்கள் என்று மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் இன்று சரிசமமாக உள்ளன. அதற்கு இணையாக சாதி மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது.

நாங்கள் எந்த கூட்டணிக்கு செல்கிறோமோ, அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த தேர்தலில் 500 முதல் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 60 தொகுதிகளில் அதிமுக தோல்வியைத் தழுவிய தொகுதிகளில் திமுக வெற்றி அடைந்தது. தேமுதிகவிற்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளன.
இன்றைக்கு 170 தொகுதிகளில் போட்டியிட திமுகவும் அதிமுகவும் நினைக்கிறார்கள். கொள்கை முடிவாக அறிவிக்கிறார்கள். தேமுதிகவுக்கும் அதுபோல் கொள்கை உள்ளன.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எங்களிடம் 20 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதனால் கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை. கூடுதல் இடங்கள தருவது உங்களின் கடமை. தேமுதிக முதலமைச்சராக கேட்கவில்லை, உங்களை முதல் அமைச்சராக்கத்தான் இடங்கள் கேட்கிறோம்" என்று பேசினார்.














