``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி
திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கனிமொழி தலைமை தாங்கும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த, 46 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, தன்னார்வலர்கள் மூலம் நாப்கின் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 400 மொபைல் டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 250 ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டு திடலில் போடப்பட்டிருக்கும் நாற்காளிகளில் பை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பையில் சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர், மாசா கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருக்கின்றன.












