செய்திகள் :

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்'- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

post image

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லாமல் போய்விடும்.

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தீர்ப்பு, இதற்கு தீர்வு கண்டுள்ளது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், "மனைவியைப் பராமரிக்க வேண்டியது கணவனின் கடமையாகும். தம்பதிகள் பிரிந்திருக்கும் சூழ்நிலைகளில், மனைவி குற்றவியல் சட்டத்தின் மூலமாகவோ அல்லது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் உள்ள பராமரிப்பு விதிகளின் மூலமாகவோ பராமரிப்பு கோரலாம்.

இருப்பினும், ஓர் ஆணின் இந்தப் பராமரிப்பு கடமை அவரின் மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஏனெனில், சட்டமானது ஒரு கைம்பெண் தன்னுடைய மாமனாரிடம் இருந்து பராமரிப்பு கோர அனுமதிக்கிறது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து

மேலும், ``இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956-இன் பிரிவு 19-இன் படி, ஒரு கைம்பெண் மருமகள் தன்னுடைய மாமனாரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். ஆனால் அதற்கு தனது சொந்த வருமானம் அல்லது பிற சொத்துக்கள் மூலம் தன்னைப் பராமரித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, இது போன்று மாமனாரிடமிருந்து அவர் இந்த உரிமையைப் பெற முடியும்.

அதோடு அவரால் தன்னுடைய மறைந்த கணவரின் சொத்தைப் பெற முடியாமலும், தன்னுடைய தாய், தந்தை ஆகியோரிடமிருந்தும் பராமரிப்புத் தொகை பெற முடியாமலும் இருக்க வேண்டும். மேலும், மாமனாரிடம் அந்தப் பராமரிப்பை வழங்கக்கூடிய அளவிற்கு சொத்து இருக்க வேண்டும். மருமகள் மறுமணம் செய்துகொண்டால், இந்த பராமரிப்பு கோரும் உரிமை ரத்தாகிவிடும்'' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரைச் சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து இத்தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

13 ஆண்டுகள் கோமா; கண்ணியமாக இறக்க அனுமதித்த உச்ச நீதிமன்றம் - விடைபெற்றார் ஹரிஷ் ராணா!

சண்டிகரில், 2013ம் ஆண்டு கல்லூரிக் கட்டடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்த ஹரிஷ் ராணா என்பவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: "மரணங்களை விளைவிக்கக்கூடிய வகையில் காயங்கள்" - நீதிபதி

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

பாமக: `மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது!' - ராமதாஸ், அன்புமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி ராமதாஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவ... மேலும் பார்க்க

`தத்துக்குழந்தையின் வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும் தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் மகப்பேறு நலச்சட்டத்தின் படி 3 மாதங்களுக்கு கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை! - விவரம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், தீபம் ஏற்ற அனுமதிக்காத அதிகாரிகள் மீது நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அமைப்புகள் ... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகிலுள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தசேகர். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனந்தசேகர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர... மேலும் பார்க்க