'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?
ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் வழங்கும், தமிழ் புத்தாண்டு & அட்சய திருதியை பிரத்யேக சிறப்பு சலுகைகள்!
1964-ஆம் ஆண்டு முதல் தென் இந்தியாவின் நகைத்துறையில் நம்பிக்கைக்குரிய பெயராகத் திகழும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், மரபு, கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை என்ற தனது பாரம்பர்யத்தை இன்றும் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளின் விரிவான தொகுப்புகளுக்காக அறியப்படும் இந்த பிராண்ட், தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்களையும் மேலும் சிங்கப்பூரில் ஒரு ஷோரூமையும் கொண்டு வலுவான நிலையை உருவாக்கியுள்ளது. தமிழகத்தின் பண்டிகைக் காலத்தின் ஒரு பகுதியாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் தனது ‘தமிழ்ப் புத்தாண்டு’ மற்றும் ‘அட்சய திருதியை’ கொண்டாட்டங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் மங்களமான தொடக்கங்களின் மகிழ்ச்சியை உயர்த்தும் வகையில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் மூலம், ஆழமாகப் போற்றப்படும் இவ்விரு நன்னாள்களையும் இந்நிறுவனம் ஒன்றிணைத்து கொண்டாடுகிறது.

தனது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அட்சய திருதியை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் பல்வேறு பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் முக்கியமாக, தங்க நகைகளின் சேதாரம் (VA) மீது 20% தள்ளுபடி வழங்குவது இச்சலுகைகளின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் மங்களமான தொடக்கங்களின் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டாட வாடிக்கையாளர்களை அழைக்கிறது. பண்டிகை கால மகிழ்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், இந்த பிராண்ட் கூடுதலாக பல சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. பழைய தங்க நகைகளை மாற்றும் போது ஒரு கிராமுக்கு ரூபாய் 100 கூடுதல், வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் (சாலிடெர்கள் தவிர) 12.5% தள்ளுபடி, வெள்ளி பொருள்களின் சேதாரம் (VA) மீது 25% தள்ளுபடியும், வெள்ளி நகைகளின் MRP-யின் மீது 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், தங்க நாணயங்களுக்கு சேதாரம் (VA) எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் தங்களின் நகைகளை முன்பதிவு செய்து, விலையிலான மாற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். அட்சய திருதியை நாளில் (ஏப்ரல் 19 & 20) தங்கத்தின் விலை குறைந்தால், அந்த விலை வேறுபாட்டுத் தொகையை ஜி.ஆர்.டி திருப்பித் தரும் என்று உறுதி அளிக்கிறது. இந்த முன்பதிவுச் சலுகையைப் பெற, 75% தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்தப் பண்டிகை கொண்டாட்டங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது, ``தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டும் அட்சய திருதியையும் மிகுந்த மதிப்புடன் போற்றப்படும் தினங்களாகும். அவை மாநிலம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு செழிப்பு, நேர்மறை எண்ணங்கள் மற்றும் மங்களமான புதிய தொடக்கங்களைக் குறிக்கின்றன. ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நகை சேகரிப்புகளையும், மதிப்புமிக்க பண்டிகைக் காலச் சலுகைகளையும் வழங்குவதன் மூலம், இத்தகைய முக்கியத் தருணங்களை எப்போதும் இன்னும் அதிக நினைவில் நிற்கும் வகையில் மாற்ற முயன்று வருகிறது. இந்த பருவத்திற்கான பிராண்டின் சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்கள் தங்களின் பண்டிகை மற்றும் மங்களமான வாங்குதல்களை திட்டமிடும் போது அவர்களுக்கு அதிக நம்பிக்கையும் வசதியும் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன." என்றார்.

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸின் மேலாண்மை இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ``தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அட்சய திருதியை போன்ற பண்டிகை காலங்களில் நகை வாங்குவது, தமிழ் குடும்பங்களில் ஆழமான உணர்ச்சி மற்றும் பாரம்பர்ய முக்கியத்துவத்தை கொண்டதாக உள்ளது. இவை ஆசீர்வாதம், செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையூட்டும் வாங்கும் அனுபவத்தை உறுதி செய்யும் நம் பிராண்டின் அர்ப்பணிப்பை, ‘விலைப் பாதுகாப்புடன் கூடிய முன்பதிவு வசதி’ (Pre-booking facility with price protection) பிரதிபலிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் ஷோரூமிற்கு வருகை தந்து, குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த பண்டிகை கால நகைத் தொகுப்புகளாலும் சலுகைகளாலும் பயன்பெற வேண்டும்"என்று அன்புடன் அழைப்பு விடுத்தார்.















