செய்திகள் :

'ஸ்டாலின் கொரோனால போயிடுவாருன்னு சொன்னேனா?' - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

post image

தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'கொரோனா காலத்தில் இவரே போயிருப்பார்' எனப் பேசியிருப்பது சர்ச்சையானது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

EPS
EPS

தி.நகர் சத்யாவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கையில், 'அதிமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா என எல்லாம் வந்தது. நாங்கள் விலைமதிப்பற்ற மக்களின் உயிரை காப்பாற்றினோம். திமுக ஆட்சியில் அப்படி எதாவது வந்ததா? திமுக ஆட்சியில் புயல், மழை, கொரோனா வந்திருந்தால் ஸ்டாலின் காணாமல் போயிருப்பார். கொரோனா வந்திருந்தால் கொரோனாவிலேயே போயிருப்பார்' என்றார்.

அதற்கு பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், 'மரணத்தை பார்த்து பயப்படக்கூடியவனோ கலங்கக்கூடியவனோ நான் அல்ல. கொரோனா காலக்கட்டத்தின் போது எல்லாரும் அச்சத்தில் இருந்தார்கள். அப்போது பாதுகாப்பு கவசங்களோடு கொரோனா அறைக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். அதை என் மனைவியிடம்கூட சொல்லவில்லை. அதற்காக அவர் என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரமாக பேசவே இல்லை' என்றார்.

EPS
EPS

இந்நிலையில், இன்று சேப்பாக்கத்தில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் பேசியதாவது, 'கொரோனா காலக்கட்டத்தில் ஸ்டாலின் மக்களுக்கு சரியாக உதவவில்லை. ஓடோடி போட்டோஷுட் எடுக்கும் ஸ்டாலின் அப்போது காணாமல் போய்விட்டார். 'காணாமல் போய்விட்டார்' என்றுதான் சொன்னேன். ஸ்டாலினை பற்றி தவறாக பேச வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆனால், என்னை நீங்களும் உதயநிதியும் என்னவெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் பேசினால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்' என்றார்.

மது போதையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிய 4-ம் வகுப்பு மாணவன்; `மது விலக்கு' பீகாரின் அவலம்!

அறிவொளி ஏற்ற வேண்டிய பள்ளிக்கூடமே, சட்டவிரோத மதுபானங்களைக் குவித்து வைக்கும் கிடங்காக மாறிய அவலம், பீகாரில் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் மது அருந்தி மயங்... மேலும் பார்க்க

"திமுக தேர்தல் அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில்கூட அதைப் பற்றிச் சொல்லவில்லை" - காரணம் சொல்லும் சௌமியா

"பெண்கள் பாதுகாப்பு தமிழ்நாட்டில் முற்றிலுமாக இல்லை. பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள், ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது..." என்று தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேசியுள்ளார்.வ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி: மாமியாருக்கு மாற்றாக மருமகள்; பா.ஜ.க- வின் தேர்தல் வியூகம் என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக கிருத்திகா என்பவரை களமிறக்கியிருக்கிறது தலைமை. அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ - வான சரஸ்வதியின் மருமகளான கிருத்திகாவிற்கு தீவிர வாக்கு ச... மேலும் பார்க்க

`எப்படி ஜெயிக்குறாங்கனு பார்த்துடுறேன்!' - தலைநகர் உள்ளடி டு சீட்டுக்கு 2 ஸ்வீட் பாக்ஸ்! | கழுகார்

"வேலை பார்ப்பவர்களுக்கே மேயர் பதவி!"தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக, சிட்டிங் மேயர் சண்.இராமநாதன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இராமநாதன் தன்னுடைய மேயர் பதவியைக் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியே ராஜினாமா செய... மேலும் பார்க்க

ஈரான் போனால் போகட்டும்; லெபனானை குறி வைக்கும் இஸ்ரேல்; ஆதரிக்கும் அமெரிக்கா - ஏன், எதற்காக?

இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை, ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் கூறுகையில், 'ஈரான் போர் நிறுத்தத்... மேலும் பார்க்க