செய்திகள் :

'ஆடுகளம்' சீரியலில் இருந்து வெளியேறுகிறார் டெல்னா டேவிஸ் - காரணம் இதுவா?

post image

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆடுகளம்' தொடரிலிருந்து வெளியேறுகிறார் நடிகை டெல்னா டேவிஸ்.

சீனியர் நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோருடன் நடிகை காயத்ரி ஜெயராம், டெல்னா டேவிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது 'ஆடுகளம்' சீரியல்.

நடிகர் டெல்லி கணேஷ் இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆகி சில தினங்கள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்ட நிலையில் இறந்து விட, அவருக்குப் பதில்தான் காத்தாடி ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மதிய நேர ஸ்லாட்டுக்கு மாற்றினார்கள்.

அப்போதிருந்தே சீரியலின் ஹீரோ, ஹீரோயினான டெல்னா டேவிஸ், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காயத்ரி ஜெயராமன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இது குறித்து விகடன் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

'பிரைம் டைம்' எனச் சொல்லிவிட்டு இப்போது மதிய நேரத்துக்கு மாத்தினா எப்படி' என்பதே இவர்களின் கேள்வியாக இருந்தது.

ஆனாலும் சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நடிகர் நடிகைகளிடம் பேசி சமாதானம் செய்ததாக கூறப்பட்டது.

டெல்னா

இந்தச் சூழலில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவெனில் தொடரிலிருந்து நடிகை டெல்னா டேவிஸ் வெளியேறுகிறார் என்பதுதான்.

சீரியலில் சத்யா என்கிற கேரக்டரில் நடித்து வரும் டெல்னா சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பிடம் வெளியேறுவது தொடர்பாக தனது விருப்பத்தை உறுதியாகத் தெரிவித்து விட்டாராம்.

சேனல் அவருடன் பேசிப் பார்த்தும் அவர் கன்வின்ஸ் ஆகவில்லை என்கிறார்கள். இந்த மாத ஷெட்யூலை முடித்துக் கொடுத்து விட்டோ அல்லது அடுத்த மாதத்துடனோ வெளியேறவிருக்கிறாராம்.

யூனிட்டைச் சேர்ந்த சிலரிடம் பேச்சுக்கொடுத்த போது,

'இப்ப நடிக்க வர்ற ஆர்ட்டிஸ்டுகள் பிரைம் டைம், பிரைம் டைம் அல்லாத சீரியல்கள்னு பார்த்து அதுக்கேத்தபடி முக்கியத்துவம் கொடுத்தே நடிக்க வர்றாங்க. டெல்னாவும் சீரியலின் நேரம் மாத்தப்பட்டதுல ரொம்பவே அப்செட்ல இருந்தாங்க. அதோட தொடர்ச்சியாகத்தான் சீரியலில் இருந்து வெளியேறி இருக்காங்கனு தோணுது' என்றார்கள் அவர்கள்.

டெல்னா வெளியேறிய பிறகே அவருக்குப் பதில் வேறு யாராவது கமிட் ஆவார்களா அல்லது சத்யா என்கிற அந்தக் கேரக்டர் முடிக்கப்பட்டு விடுமா என்பது குறித்து முடிவெடுக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Azhagae Azhagu: "இப்போவே ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறனு திட்டினாங்க" - அன்ஷித்தா பேட்டி

அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. 'செல்லம்மா' சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம். மலையாளம் கலந்த தமிழில் பேசிய ... மேலும் பார்க்க

Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.ஷப்னம்'தெய்வ மகள்', 'மாரி' உள்... மேலும் பார்க்க

சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சம... மேலும் பார்க்க

`அந்த ஷோ பிக் அப் ஆகிடுச்சு; ஆனா நான் மாட்டிகிட்டேன்' - 'சமையல் சூப்பர் ஸ்டார்' மேடையில் சாய் சக்தி

அவள் விகடன் நடத்திய 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பிரபல செஃப் தீனா நடுவராக வந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இ... மேலும் பார்க்க

ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

ந‌டிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும், அந்த பந்தத்தின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததும், சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் மகளிர் ஆணையம், நீதிமன்றம் என பல இ... மேலும் பார்க்க

`தம்பி மாதிரி பார்த்தேன்; இப்படி ஏமாத்துவான்னு நினைச்சுக்கூட பார்க்கலை!' - பிக்பாஸ் தாமரை செல்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரின் ஹீரோயின் ஸ்வேதாவுக்கும் அவர் கணவர் ஆதிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிற சூழலில், ஆதி மீது பண மோசடிப் புகார் ... மேலும் பார்க்க