செய்திகள் :

Azhagae Azhagu: "இப்போவே ஏன் அம்மா கேரக்டர்ல நடிக்கிறனு திட்டினாங்க" - அன்ஷித்தா பேட்டி

post image

அழகே அழகே சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் அன்ஷித்தா. 'செல்லம்மா' சீரியல், பிக் பாஸ், பர்சனல் எனப் பல விஷயங்கள் பற்றி அன்ஷித்தாவிடம் உரையாடினோம்.

மலையாளம் கலந்த தமிழில் பேசிய அவர், "ஜியோ ஹாட்ஸ்டார்-ல் டாப் 5 சீரியல்களின் பட்டியலில் எங்களுடைய 'அழகே அழகே' சீரியல் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் சாத்தியமானது.

நக்‌ஷத்திரா இந்தச் சீரியலில் இருக்கிறாங்க என்பது முதலில் எனக்கு தெரியாது. பூஜைக்கு வேற ஒருத்தர் வந்திருந்தாங்க. ஷுட் தொடங்குனதுக்கு அப்புறம்தான் நக்ஷத்திரா இந்தச் சீரியல்ல நடிக்கிறாங்கனு எனக்கு தெரியும். எனக்கு ரொம்ப ஹாப்பி ஆயிடுச்சு.

Actress Anshitha
Actress Anshitha

நக்ஷத்திரா கூட நான் டக்குனு ஃப்ரண்ட் ஆயிட்டேன். இரண்டு மருமகள்களின் கதைன்னு சொல்லும்போது நிறைய சண்டை இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா அப்படி இல்லாம ரெண்டு பேரோட கதாபாத்திரமும் நல்லா இருக்கு" என்றவர் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் பற்றி பேசும்போது, "அழகே அழகே சீரியல் நான் பண்ற ரோல்க்கு மேக்கப் பெருசா தேவைப்படல.

என்னுடைய இயல்புல நடிக்கிற மாதிரியே இருக்கு. நான் இதுக்கு முன்னாடி பண்ணின சீரியலிலும் எனக்கு மேக்கப் போடுற வேலை இல்லை. அதனால, 'அழகே அழகே' சீரியல் வரும்போது மேக்கப் போடலாம்னு எதிர்பார்த்து வந்தேன்.

மலர் கதாபாத்திரத்திலும் மேக்கப் போடாம நடிச்சாதான் நல்லா இருக்கும்னு டைரக்டர் சொல்லிட்டாரு. மலருக்கும் அதுதான் அழகா இருக்கும். என்னோட காஸ்டியூம் நல்லா இருக்கிறதுக்கு கேமராமன் சரவணன் சார்தான் காரணம்.

அவர்தான் என்ன மாதிரியான கலர்ல டிரஸ் நல்லா இருக்கும்னு டிப்ஸ் தருவாரு. 'செல்லம்மா' சீரியல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். மலையாளத்துல சீரியல் பண்ணிட்டு இருக்கும் போது எனக்கு தமிழ் சீரியல் பண்ணனும்னு ஆசை இருந்தது.

அப்பதான் எனக்கு 'செல்லம்மா' வாய்ப்பு கிடைத்தது. அப்போ எனக்கு வயசு 24. எல்லாரும் ஏன் இப்பவே அம்மா ரோல் பண்றேன்னு திட்டினாங்க.

Actress Anshitha
Actress Anshitha

எனக்கு செல்லம்மாவோட கதை ரொம்ப பிடிச்சி இருந்தது. சின்ன வயசுல எனக்கு ஆக்டிங் ரொம்ப பிடிக்காது. அம்மாக்கு பாட்டிக்கும் பிடிக்கும்னு அவங்க ஆசைக்காகத்தான் பண்ணேன்.

ஆனா 18 வயசுக்கு மேல 'ஆக்ஷன் கட்'குள்ள வாழ்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என்னுடைய குழந்தைப் பருவத்து நினைவுகள் எனக்கு எப்போதும் அழகானது.

அம்மா மற்றும் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதை நான் வெளிப்படுத்தியதில்லை. அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன். அப்பா - அம்மா பிரிவுக்குப் பின் நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன்" என்றார்.

Serial Update: டிவி ஏரியாவில் பறக்கும் TVK கொடி; 'மேன்சன் குத்து' பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி

டிவி ஏரியாவில் டிவிகே கொடி!வரும் தேர்தலில் புதிதாகக் களம் காணூம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சீரியல் ஏரியாவிலிருந்து பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.ஷப்னம்'தெய்வ மகள்', 'மாரி' உள்... மேலும் பார்க்க

சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சம... மேலும் பார்க்க

`அந்த ஷோ பிக் அப் ஆகிடுச்சு; ஆனா நான் மாட்டிகிட்டேன்' - 'சமையல் சூப்பர் ஸ்டார்' மேடையில் சாய் சக்தி

அவள் விகடன் நடத்திய 'சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பிரபல செஃப் தீனா நடுவராக வந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தார். இ... மேலும் பார்க்க

ஜாய் கிறிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை - டிஎன்ஏ சோதனையில் உறுதி?

ந‌டிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்ததாகவும், அந்த பந்தத்தின் மூலம் தனக்குக் குழந்தை பிறந்ததும், சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் மகளிர் ஆணையம், நீதிமன்றம் என பல இ... மேலும் பார்க்க

`தம்பி மாதிரி பார்த்தேன்; இப்படி ஏமாத்துவான்னு நினைச்சுக்கூட பார்க்கலை!' - பிக்பாஸ் தாமரை செல்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரின் ஹீரோயின் ஸ்வேதாவுக்கும் அவர் கணவர் ஆதிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிற சூழலில், ஆதி மீது பண மோசடிப் புகார் ... மேலும் பார்க்க

டபுள் குக், பெண் நடுவர், மிஸ் ஆகாத தாமு, சின்ன பொண்ணு, மகாலிங்கம்.. குக்கு வித் கோமாளி சீசன் 7 ரெடி!

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக்கு வித் கோமாளி 7வது சீசனின் புரொமோ வந்து விட்டது.இந்தச் சீசன் தொடர்பாக கடந்த சில தினங்களாகச் சில தகவல்கள் கசிந்து வந்தன..அதாவது செஃப் தாமு இந்தச் சீசன... மேலும் பார்க்க